Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 22, 2019

உலக செய்திகள்
 1. நிலவினைப் பற்றிய ஆய்விற்காக, 715 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பெரேஷீட் (Beresheet) எனப்படும் ஆளில்லா விண்கலத்தை இஸ்ரேல் நாடானது, பால்கன் – 09 என்ற இராக்கெட் மூலம் நிலவில் தரையிறக்க உள்ளது.
தேசிய செய்திகள்
 1. அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க தமிழக அரசுக்கும்பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
 2. தீனதயாள் அந்தியோதயா யோஜனா எனப்படும் தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றத்திற்கான திட்டதை' (National Rural Economic Transformation Project) செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
 3. ஆயுர்வேதம்சித்தாயுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துப் பொருட்களின் விற்பனைக்கு உரிமம் வழங்குவதற்காக மின்னணு முறையிலான ஆஷாதி (e-AUSHADHI) என்ற தளத்தை, ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புது தில்லியில் துவக்கி வைத்தார்.
 4. நீர்வழிப் போக்குவரத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, லேடிஸ் (LADIS) என்ற புதிய தளத்தை, இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (Inland Waterway Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது.
 5. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடம் ஒதுக்க தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
 6. தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ‘சர்வதேச பூஜ்ஜிய நோக்கு மாநாடு’ (International Vision Zero Conference) மும்பையில் நடைபெறுகிறது.
வர்த்தக செய்திகள்
 1. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. AntBot என்ற பெயரில் ஜி.பி.எஸ். உதவியில்லாமல் நடமாடும் உலகின் முதல் ரோபோட்டைபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த CNRS (National Centre for Scientific Research) அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
 1. பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்டெரன்ஜா சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் (Strandja Memorial Tournament) மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸ்ரீன்னும் (Nikhat Zareen) மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீனா குமாரி தேவியும் தங்கம் வென்றுள்ளனர். மேலும் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
 2. ஓய்வு பெற்ற நீதிபதியான டி.கேஜெயினை பிசிசிஐ அமைப்பின் முதல் குறை தீர் நடுவராக நியமித்தது உச்ச நீதிமன்றம்
 3. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு துறையின் மைய தலைவராக அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 4. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்கிற சாதனையை மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். இவர் பாகிஸ்தான் வீரரான சாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்
இரங்கல்
 1. ஹிந்தி இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர் கவிஞர் மற்றும் விமர்சகருமான நாம்வர் சிங் காலமானார்

No comments: