Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 27, 2019

உலக செய்திகள் 
1. ஆப்கானிஸ்தான் நாடானது, முதன் முதலாக பாகிஸ்தான் வழிப் பாதையை தவிர்த்து ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.
2. தாய்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான “கோப்ரா கோல்டு” (Cobra Gold) இராணுவ பயிற்சியானது தாய்லாந்தில் நடைபெற்றது.
3. லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா) நகரில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்திய பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட “பிரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்” (Period end of sentence) என்ற படத்திற்கு சிறந்த ஆவண குறும் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
4. 91வது ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா) நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படம் – கிரீன் புக் (Green Book), சிறந்த நடிகர் – ராமி மாலிக் (Rami malek), சிறந்த நடிகை – ஒலி வியா கோல்மன், சிறந்த அனிமேசன் திரைப்படம் – Spiderman into spider verse

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 27, 2019

தேசிய செய்திகள்
5. இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே நீடித்த மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான இந்தியத் திருவிழாவானது (Festival of India) காத்மண்டுவில் (நேபாளம்) நடைபெற்றது.
6. அரசு துறைகள் விரைவாக செயல்படுவதை உறுதிபடுத்தி, அதன் பணிகளில் வெளிப்படை தன்மையை அதிகரிப்பதற்காக, உத்திரகாண்ட் மாநில அரசானது பொதுப் புகாரை மக்கள் அளிப்பதற்காக “1905” என்ற உதவி எண்ணை தொடங்கியுள்ளது.
7. நான்காவது “உலகளாவிய ஆரோக்கியத்தில் டிஜிட்டல் பங்களிப்பு” உச்சி மாநாடானது (4th Global Digital Health Partnership summit), மத்திய சுகாதார அமைச்சர் J.P. நட்டா புதுடெல்லியில் தொடங்கி வைத்துள்ளார்.
8. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ(MSME) எக்ஸ்போர்ட் புரமோஷன் செல் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
9. உலகளவில் பொது சுகாதார பிரச்சனையாக உள்ள ஹெபடைடிஸ் வைரஸ் நோயை இந்தியாவில் ஒழிப்பதற்கான தேசிய அளவிலான செயல் திட்டத்தை (National Action Plan – Viral Hepatitis) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மும்பையில் தொடங்கியுள்ளார்.
10. மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகளை டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்.
11. கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி 30 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.
12. ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் 106 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 81 ஏக்கர் நிலப்பரப்பில் பின்னலாடை தொழிற்பூங்காவின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
13. 14வது வேளாண் அறிவியல் மாநாடு(Agricultural Science Congress) புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு விவசாய மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள்(Innovations for Agricultural Transformation) என்பதாகும்
14. சூடான் நாட்டின் பிரதமராக மொஹமது தாகிர் ஆயாலா பதவியேற்றார்
15. ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான “ஏரோ இந்தியா – 2019” பெங்களுரில் நடைபெற்றது.
16. ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத ஆறுகள் சூழ்ந்த பகுதியில் "நம்பிக்கை வாகனம்" என்றழைக்கப்படும் “படகு ஆம்புலன்ஸ்” சேவையை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள் 
17. இந்தியாவின் சதுரங்க கிராண்ட் மாஸ்டரான “அபிஜித் குப்தா” கேன்ஸ் சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில் (Cannes International Open trophy) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
18. ஆசியன் ஹாக்கி சம்மேளனத்தின் 2018ம் ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரருக்கான விருது இந்தியாவின் “ஹர்மன்பிரீத் சிங்க்கும்2018ம் ஆண்டின் சிறந்த எழுச்சி வீரர் (Rising Player of the Year) விருது “லாரம்சியோமி(இந்தியா)” (Lalremsiami)-க்கு வழங்கப்பட்டது

No comments: