Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 01, 2019

உலக செய்திகள்
  1. மலேசியாவின் 16ஆவது மாமன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 01, 2019


தேசிய செய்திகள்
  1. பிரதம மந்திரியின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் 4 இலட்சம் வீடுகள் கட்டித்தர அரசானை பிறப்பிக்கப்படவுள்ளது
  2. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) 100 நாள் நுகர்வோர் சேவை திட்டமான “ஸ்வஸ்த் பாரத் யாத்ரா” (Swasth Bharat Yatra) தேசிய பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு ஒட்டு மொத்த அளவில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு (International Stock Taking Conference on Tiger Conservation – 2019) புதுடெல்லியில் நடைபெற்றது.
  4. சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் “சிறந்த அணிவகுப்பில்”(Best Parade) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது(Information and Broadcasting Ministry) முதல் பரிசினை வென்றுள்ளது.
  5. ஆண்ட்ரி மேகின் என்பவர் எழுதிய லா வி டி’வின் ஹோம் இன்கோன்னு (Andrei Makine’s “La Vie d’un homme inconnu” – தெரியாத மனிதனின் வாழ்க்கை) எனும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பானது இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான “ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசினை” வென்றுள்ளது.
  6. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 16% அதிகரித்துள்ளது
பட்ஜெட் செய்திகள்
  1. இடைக்கால பட்ஜெட்டில் வரும் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த செலவுகள் 27,84,200 கோடியாக அதிகரித்துள்ளது.
  2. ரயில்வே துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 1,58,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  3. மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 3,27,679 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  4. தேசிய கல்வித் திட்டத்திற்கான 38,572 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  5. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 27,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. தாழ்த்தப்பட்டோருக்கான நலத்திட்டங்களுக்காக 1,801 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  7. பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக 50,86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  9. பிரதம மந்திரியின் வேளாண் நிதித் திட்டதின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  10. வருமான வரிக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  11. முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது
  12. உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
  13. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.