Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 01, 2019

தேசிய செய்திகள்
1. 800 கிலோ எடையுள்ள பகவத் கீதை புத்தகத்தை டெல்லியில் உள்ள ISKCON கோவிலில் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார்
3. தேசிய வடிவமைப்பு நிறுவனத்தை சுரேஷ் பிரபு அவர்கள்  மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலிலும், அஸ்ஸாம் மாநிலத்தில் ஜோர்கடிலும் தொடங்கி வைத்தார்.
4. மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவின் புதிய இரயில் மண்டலத்தை அறிவித்துள்ளார். இது தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம் (Southern Coast Railway) ஆகும்.
5. தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியான ‘ஷிரியாஸ்’ (SHREYAS – Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
6. தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா 2019 விருதுகள் பிரதம மந்திரி நரேந்திர மோடியால் புது தில்லி விஜயன் பவனில் வழங்கப்பட்டது. இவ்விழாவின் மையக்கருத்து இந்தியாவின் புதிய குரல் மற்றும் கொள்கைக்கான தீர்வுகளை கண்டறிதல் என்பதாகும்.
7. பொருளாதார ஒத்துழைப்பின் 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் அமர்வானது புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் நோக்கம் இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையே இயந்திரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளை மேம்பாடு என்பதாகும்
8. தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) நிறுவனத்தின் புதிய தலைவராக கல்வியாளரும் ஆசிரியருமான கோவிந்த் பிரசாத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
நடப்பு நிகழ்வுகள் மார்ச் 01, 2019
வர்த்தக செய்திகள் 
9. ஐ.டி.பி.ஐ வங்கியின் நிர்வாகத்தில் இல்லாத தலைவராக ஹேமந்த் பார்கவா நியமிக்கப்பட்டார்
10. உலகின் மொத்த மக்கள் தொகையில் 94 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவீதம்– கொண்ட 100 நாடுகளை உள்ளடக்கிய, “உள்ளடங்கிய இணைய குறியீட்டு பட்டியல் – 2019ல் இந்தியாவானது 47-வது இடத்தைப் பிடித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்திலும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.
11. மத்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் மத்திய நிறுவனத்தை சதானந்தா கௌடா அவர்கள் திரிபுராவில் திறந்து வைத்தார்
12. "விமான ஒருங்கிணைப்பு மாநாடு 2019"ஐ சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார். இம்மாநாட்டின் கருத்துரு “Flying for all”.என்பதாகும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
13. அறிவியல், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் விருதான “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018” மருத்துவ துறைக்காக டாக்டர். கணேசன் வெங்கட சுப்ரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டது
விளையாட்டு செய்திகள்
14. புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌத்ரி மற்றும் மானு பேக்கர் இணை தங்கம் வென்றுள்ளார்.

No comments:

Post a Comment