Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 10, 2019

உலக செய்திகள்
1. ஈஸ்டோனியா நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக கஜா கல்லாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள் 
2. மேற்கு வங்காள மாநிலத்தில் இளம் தொழில்முனைவோர்களுக்கு நிதியளிக்க உதவுவதற்காக மம்தா பானர்ஜி "யுவஸ்ரீ அர்பன்" திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
3. இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தில் CIBMS-ன் (விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு) கீழ் BOLD-QT(BOLD-QIT-> Border Electronically Dominated QRT Interception Technique) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
4. 2019 ஆம் ஆண்டின் தேசிய ஸ்டெம் (STEM- Science, Technology, Engineering and Maths-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி “காவ்யா கோப்பராப்பு”-விற்கு வழங்கப்பட்டுள்ளது.
5. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் “ஸ்வச் சர்வேக்சேன் விருது-2019”ஐ புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதில், இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரமானது தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம்-அம்பிகாபூர், சத்தீஸ்கர் ,மூன்றாம் இடம்-மைசூர், கர்நாடகா.
6. சிறிய நகரங்களின் தூய்மை நகரத்திற்கான விருது புதுடெல்லிகிக்கும்  பெருநகரங்களில் தூய்மை நகரத்திற்கான விருது அகமதாபாத், குஜராத் மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
7. விமான சேவை மற்றும் விமான தரத்தின் அடிப்படையில் ஒடிசாவில் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையதிற்கு 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிலையம் என்ற விருது வழங்கப்பட்டது
8. திட பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியை இந்தியா தடை செய்துள்ளது
9. பாபா அணு ஆராய்ச்சி மையதின் இயக்குனராக அஜித்குமார் மோகந்தி நியமிக்கப்பட்டார்
10. சௌதி அரேபியாவுக்கான இந்தியாவின் தூதுவராக அசாஃப் சயீத் நியமிக்கப்பட்டுள்ளார்
விளையாட்டு செய்திகள் 
11. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக “அனில் கும்ளே” (ICC – Cricket Committee new Chairman) நியமிக்கப்பட்டுள்ளார்.