Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 15, 2019

உலக செய்திகள் 
1. "தஞ்சாவூர் மாவட்டம்" திருப்புவனத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் "திருப்புவன பட்டுச் சேலைக்கு" புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
2. "கர்நாடகா" மாநிலத்தைச் சேர்ந்த உத்திரகாண்டா மாவட்டத்தில் விளையக்கூடிய "சிர்சி சுப்பாரி" (SIRSI SUPARI) என்ற பாக்கு (Arecnut) வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
3. உயர்தர வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை அளிப்பதற்காக, சீனாவானது “ஜீசாட் 6C” (GSAT-6C) என்ற செயற்கைகோளை “லாங் மார்ச் – 3B” என்ற ஏவுகணை மூலம் புவி சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தியுள்ளது.
தேசிய செய்திகள் 
4. ஹச்.ஐ.வி (HIV)-ஆல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச ஆலோசனை மற்றும் ART – Therapy (Anti – Retroviral Therapy) முறையில் சிகிச்சை வழங்குவதற்காக, இந்தியாவில் LGVTQ-HIV சிகிச்சை மையமானது மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது.
5. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கான, இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT – Internet of Things) என்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டின் 4வது பதிப்பு பெங்களுரில் நடைபெற்றது.
6. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – மத்திய வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CECRI/Central Electro Chemical Research Institute) முதலாவது பெண் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என். கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
7. பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற புத்தகத்தை  நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார் .
8. அயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி “இப்ராகிம் கலிபுல்லா" தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
9. இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை 112 நபர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.
10. ஆஹார் - சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் விழாவின் 34வது பாதிப்பு இந்தியா வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனத்தால் (ITPO) டெல்லியில் நடத்தப்பட்டது
11. 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ககளின் போது இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தானிலும், சீனாவிலும் குடியேறிய மக்களின் சொத்துக்களை(Enemy properties) பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
12. தமிழகத்தின் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்
13. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் பார்பி டால் ரோல் மாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
14. லட்சுமிராய் சிங் மேவார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகளை நன்கொடையாக வழங்கி கின்னஸ் உலக சாதனை படைத்தார்
15. ராகேஷ் மக்கிஜா ஆக்சிஸ் வங்கியின் செயலாமைக்குட்படாத தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
16. நிலவின் பகல்பொழுது தோன்றும் பகுதியில் நீர் மூலக்கூறுகள் சுற்றி வருவதாக நாசாவின் நிலவு உலவுப்பணி விண்கலமான “LRO” – (Lunar Reconnaissance Orbiter) கண்டறிந்துள்ளது.
முக்கிய தினங்கள் 
17. மார்ச் 14 - உலக சிறுநீரக தினம், இதன் மையக்கருத்து "எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சிறுநீரக சுகாதாரம்" என்பதாகும் 

3 comments:

Ranjith said...

Jan current affairs how to download

Ranjith said...

Jan current affairs how to pdf download?

magesh said...

copy pste panikonga bro