Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 23, 2019

தேசிய செய்திகள் 
1. தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் கீழ் (NSM-National Supercomputing mission) இந்தியாவின் முதலாவது 1.3 பெட்டபிளாப்(peta flop) உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதியை அமைப்பதற்காக ITI-கராக்பூர், மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையத்துடன் (C-DAC-Centre For Development of Advanced Computing) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2. 33-வது இந்திய-இந்தோனேசியா நாடுகளின் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து பயிற்சியான “IND-INDO CORPAT” (India-Indonesia Coordinated Patrol) அந்தமான் நிகோபர் தீவில் உள்ள போர்ட் பிளேயர் பகுதியில் நடைபெறுகிறது.
3. இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள இதர உறுப்பு நாடுகள் ஆகியவை இணைந்து, “சாரி அர்கா தீவிரவாத எதிர்ப்பு-2019 ” (Sary-Arka-Anti Terror 2019) என்ற கூட்டுப் பயிற்சியை நடத்த உள்ளது.
4. இந்திய எழுத்தாளர் ரகு கர்நாட் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் வின்ட்ஹாம்-காம்ப்பெல் விருது (Windham-Campbell Prize) அவரது முதல் புத்தகமாக “Farthest Field: An Indian Story of the Second World War” என்ற புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
5. உலகில் அதிகமான இரயில்பெட்டி உற்பத்தியாளராக சென்னையில் உள்ள “ஒருங்கிணைந்த இரயில்பெட்டி தொழிற்சாலை” (ICF – Integral Coach Factory) சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.
6. மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்க்கும் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைப்பதற்காக, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பொது நலத்திற்கான இந்திய நிறுவனம் (IIPHG – Indian Institute of Public Health Gandhi Nagar) “Conquer Exam, Be a Warriors” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள் 
7. அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவில் டொமினிக் தீம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்-ஐ வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
8. உலக டென்னிஸ் வீரர், வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரபேல் நடால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 84வது இடத்தில் உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், நவோமி ஒசாகா (ஜப்பான்) முதலிடத்திலும் கிவிடோவா (செக் குடியரசு) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்
முக்கிய தினங்கள் 
9. மார்ச் 21 -  உலக குறை நோய்க்குறி தினம்(World Down Syndrome Day). இதன் மையக்கருத்து:-“Leave no one behind”
10. மார்ச் 22- உலக தண்ணீர் தினம். இதன் மையக்கருத்து:- 'Leaving no one behind'