Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 6, 2019

உலக செய்திகள் 
1. ஐக்யூஏர் ஏர்விசுவல் (IQAir AirVisual) மற்றும் கிரீன்பீஸ் தன்னார்வ தொண்டுஅமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலக அளவில் மிகவும் அதிக மாசுபாடுள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இதில் முதலிடத்தில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் உள்ளது .
தேசிய செய்திகள் 
2. தேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
3. இந்தியாவின் கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுக்கும் நோக்கில் “கிராம சம்ரிதி யோஐனா” (Gram Samrithi Yojana) என்ற உணவு பதப்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக உத்திர பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
4. உயிரி எரிபொருள் மற்றும் பயோ எத்தனால் ஆகியவற்றை பயன்படுத்த நிதி உதவி அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் “பிரதன் மந்திரி ஜீ-வன் யோஐனா” (Pradhan Mantri Ji-VAN Yojana-Jaiv Indhan Vatavaran Anukool Fasal Awashesh Nivaran) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
5. நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசை அறிக்கையின் படி (Delta Ranking report), அசாமின் ஹைலகாண்டி மாவட்டம் செயல்திறன் அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ளது.
6. பல்கேரியா சர்வதேச மல்யுத்த போட்டி-2019-ல் ஆடவர் 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ராங் புனிய அமெரிக்காவின் ஜோர்டான் அலிவரை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
7. கேரளா சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக 'மேட் இன் கேரளா' கண்காட்சி துபாயில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு செய்திகள் 
8. உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னனி பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
9. ஐசிசி மகளிர் ஒரு நாள் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதலிடத்தை பெற்றுள்ளார்.
10. சீனாவின் ஹான்டு நகரில் 2022 இல் நடைபெறவுள்ள ஆசியப்போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 comments: