Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 11, 2019



உலக செய்திகள் 

1. உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 24*7 மாசுக்கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.

2. கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் விங் சேவை மூலம் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் முதல் வர்த்தக ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்திள்ளது.


3. இஸ்ரேலின் பிரதமராக 5வது முறையாக பெஞ்சமின் நெத்தன்யாகு(Benjamin Netanyahu) நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய செய்திகள் 

4. லஷ்மி விலாஸ் வங்கி இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதால் அதன் பெயர் இந்தியா புல்ஸ் லஷ்மி விலாஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


5. ஏலாய்ங் மன்யூ என்ற திருவிழா நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்றது. இதில் கேன்யாக்(Konyak) இனத்தை சேர்ந்த 5000 பெண்கள் பாரம்பரிய உடையில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

6. சீனாவின் 70வது கடற்படை விழாவில் இந்தியாவை சேர்ந்த ஐஎன்எஸ் - சக்தி மற்றும் ஐஎன்எஸ் - கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்கள் பங்குபெறவுள்ளன.


7. முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படும் மா. அரங்கநாதன் இலக்கிய விருது வெளி ரங்கராஜன் மற்றும் யூமா வாசுகி என்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

8. அயல்நாடுகளில் பணிபுரிந்து தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியா 79ஆயிரம் கோடி டாலர் அனுப்பி முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.


9. தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையதை ISO தரசான்றிதலுக்கு பரிந்துரை செய்துள்ளது.

10. இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே போல்ட் குருசேத்திர 2019 இராணுவப் கூட்டு பயிற்சி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஜான்சியில் பாபினா கன்டோன்மென்டில் தொடங்கப்பட்டுள்ளது.


11. துபாயை தலைமையிடமாக கொண்ட எம்ரிட்ஸ் இஸ்லாமிய வங்கி(Emirates Islamic Bank) வாட்ஸ்ஆப் மூலமாக வங்கி சேவையை அளிக்கும் உலகின் முதல் வங்கி ஆகும்.

12. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கர்ணம் சேகர்(Karnam Sekar) நியமிக்கப்பட்டுள்ளார்

விளையாட்டு செய்திகள் 

13. உலகின் மிகவும் வயதான கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை இஸ்ரேலின் ஐசாக் ஹாயீக்(73) பெற்றுள்ளார்.

14. மெக்ஸிகோவில் நடைபெற்ற 11வது மொன்டேரி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கற்பின் முகுருசா (Garbine Muguruza)  சாம்பியன் பட்டம் வென்றார்

இரங்கல் 

15. கன்னட எழுத்தாளர் பி.ஏ. சனடி காலமானார்.



No comments:

Post a Comment