Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 12, 2019




உலக செய்திகள் 

1. ஹைட்டியின் புதிய பிரதமராக ஜீன் மைக்கேல் லாபின் (Jean Michel Lapin) நியமிக்கப்பட்டுள்ளார்.

2. அல்ஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக அப்டேல்காதர் பென்சலா (Abdelkader Bensalah)(77) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய செய்திகள் 

3. CRPF Veer Parivar என்ற மொபைல் செயலியை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் Central Reserve Police Force (CRPF) வீரர்கள் மற்றும் அவர்களில் குடும்பத்தினர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பற்றி அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தியுள்ளது.

4. தமிழ்நாட்டின் தேர்தல் பிரிவு டி.ஜி.பி-ஆக அசுதோஷ் சுக்லா(Ashutosh Shukla) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ஆந்திர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைவராக விக்ரம் நாத்(Vikram Nath) நியமிக்கப்பட்டுள்ளார்.

6. பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆரம்ப கல்வியில் மேம்பட்ட பங்கீட்டை அளிக்க உதவிய  ‘Dost Education’ என்ற நிறுவனத்திற்கு ‘The Next Billion Edtech Prize 2019’ என்ற உலக தொழில்நுட்ப பரிசு வழங்கப்பட்டுள்ளது.

7. தேசிய கட்டிட கட்டுமான கழகத்தின் (National Buildings Construction Corporation (NBCC)) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக சிவ் தாஸ் மீனா (Shiv Das Meena) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. தேசிய பசுமை தீர்ப்பாயம்(NGT)  மாசுபாட்டை குறைக்க நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையில் மத்திய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது.

9. ஆசிய டென்னிஸ் சங்கம், சேர்பிய டென்னிஸ் கூட்டமைப்பு உடன் இணைந்து, இந்திய ஜூனியர் வீரர்களுக்கு உலக புகழ்பெற்ற சேர்பிய பயிற்சியாளர்களுக்கு கீழ் RK கன்னா ஸ்டேடியத்தில் பயிற்சி வழங்கவுள்ளது.

10. பேண்டஸி 11 இன் புதிய பிராண்ட் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

11. T-90 திட்டத்தின் கீழ் 464 ரஷ்ய டாங்கிகளை வாங்க 13,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

12. பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் 2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து பிரதமரின் சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருது - 2019  விருது அவரது எழுச்சியூட்டும் சாதனைக்காக வழங்கப்பட்டது.

13. விஸ்டன் கிரிக்கெர்ஸ் அல்மனாக், 2019 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது ஸ்மிருதி மந்தானாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் முதன்மை டி20 பந்துவீச்சாளருக்கான விருது ரஷீத் கானுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள் 

14. ஏப்ரல் 10 - உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day).

15. ஏப்ரல் 11 - 'பாதுகாப்பான தாய்மை தினம்' இதன் கருத்துரு:- குடும்ப நலனில் தாய்மார்களின் பங்கு என்பதாகும்.