Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 13, 2019





தேசிய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை அறிய அறப்போர் இயக்கம் "அறப்போர்"(Arappor) என்ற செயலியை வெளியிட்டுள்ளது.

2. African lion - 2019 என்ற இராணுவ கூட்டு பயிற்சி அமெரிக்காவிற்கும் மொராக்கோவிற்கும் இடையே மொராக்கோவில் நடைபெற்றது.

3. ஐ.நா சபையின் World Summit on the Information Society Award மேற்கு வங்க மாநிலத்திற்கு உத்கர்ஸ் பங்களா மற்றும் சபூஜ் சாதி என்ற திட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் இளைஞர்ககளுக்கான திட்டங்கள்.

4. லண்டன் நகர சுதந்திர விருது ஜெனரல் இன்சூரன்ஸ் ஆப் இந்தியாவின் தலைவரான ஆலிஸ். ஜி. வைத்தியன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

5. சரஸ்வதி சம்மன் விருது 2018 கே. சிவா ரெட்டி என்பவருக்கு பாக்காகி ஒட்டிகிலிட் என்ற பாடல் தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் முதல் வாக்காளர் பூங்கா ஹரியானாவின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

7. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் முதலிடத்தில் உள்ளது. மேலும் லக்னோ இரண்டாவது இடத்திலும் வாரணாசி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

8. டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நோபல் விருது சர்வதேச மனித உரிமைகள் சபையால் டிஜிட்டல் சுக்கோனின் நிறுவனர் சுந்தன்சு குமார் என்பவருக்கு Best Digital Agency of the Year 2019 என்ற விருது வழங்கப்பட்டது.

9. பாதுகாப்பு நிதியத்தின் புதிய செயலாளராக கார்கி கவுல்(Gargi Kaul) நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள் 

10. ஹாங்காங் பங்கு சந்தை ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது மதிப்புமிக்க பங்குசந்தையாக உருவெடுத்துள்ளது. மேலும் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளது.

11. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சிறந்த வங்கிக்கான கணக்கெடுப்பில் HDFC வங்கி இந்தியாவில் வாடிக்கையாளர் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஐசிஐசிஐ வங்கி(ICICI Bank) இரண்டாவது இடத்தையும், டிபிஎஸ் வங்கி(DBS bank) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


விளையாட்டு செய்திகள் 

12. இந்தோனேசியாவை சேர்ந்த நூரெனீ(Nuraeni) 2019 ஆம் ஆண்டின் ஆசியாவில் சிறந்த தடகள பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றார்

முக்கிய தினங்கள் 

13. ஏப்ரல் 12 - உலக விமான போக்குவரத்து மற்றும் பிரபஞ்ச தினம்.

14. ஏப்ரல் 12 - உலக வானியல் மாற்றும் வீரர்கள் தினம் .




No comments:

Post a Comment