Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 14, 2019
உலக செய்திகள் 

1. இந்தியா நெதர்லாந்து இடையே அரசியல், பொருளாதார விஞ்ஞானம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்கிட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தேசிய செய்திகள் 

2. ரஷ்யா அரசின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரீவ் தி ஆஸ்போஸ்ட்லே" (Order of Saint Andrew the Apostle) என்ற விருது நரேந்திர மோடிக்கு இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதில் மேம்பட்ட பங்களிப்பை வழங்கியதற்க்காக வழங்கப்பட்டது.

3. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இரா.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

4. இந்திய மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையே கடல்சார் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான 21வது ஆசியன்-இந்தியா மூத்த அதிகாரிகளின் கூட்டம் (Senior Officials’ Meeting) புது தில்லியில் நடைபெற்றது.

5. சாதாரண மனிதர்களைப் போல காதுகேளாதோரும் வார்த்தைகளை கற்றுக் கொள்வதற்காக “DEF-ISL”  என்ற மொபைல் செயலியை, லார்சன் டூப்ரோ (எல் அன்ட் டி) சமூக பொறுப்புணர்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

6. ‘அரசியலமைப்பு சட்டமன்றத்தில் டாக்டர். பீமராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்’ (Selected Speeches of Dr. Bhimrao Ambedkar in the Constituent Assemble) என்ற புத்தகத்தை “A.சூர்ய பிரகாஷ்” என்பவர் வெளியிட்டுள்ளார்.

7. DRDO-வின் வாழ்க்கை அறிவியல் துறையின் இயக்குனரான டாக்டர் ஏ.கே.சிங் அவர்களுக்கு 2019-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது சண்டிகரில் நடைபெற்ற 4 வது ஏ.பி.ஜே. அப்துல் கலாம் புதுமைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

8. பேராசிரியர் நஜ்மா அக்தர்(Najma Akhtar), ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின்(Jamia Millia Islamia University (JMI)) முதல் பெண் துணைத் வேந்தராக(vice-chancellor) நியமிக்கப்பட்டார்

வர்த்தக செய்திகள் 

9. G-20 அமைப்பின்  2019ஆம் ஆண்டிற்கான வசந்தகால கூட்டு  தொடர் உலக வங்கி-சர்வதேச நாணய நிதியம் இடையே சர்வதேச நாணய நிதியதின் அபிவிருத்தி குழு மற்றும் நிதிக் குழுக் கூட்டம் வாஷிங்டன், டி.சி யில் நடைபெற்றது.

10. G-20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் வாஷிங்டன், டி.சி யில் நடைபெற்றது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

11. அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட, கருந்துளையை (BLOCK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர். இது மேசியர் பால்வழி மண்டலத்தில் உள்ளது. இதற்கு எம்-87 (M-87) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

12. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சக்தி வாய்ந்த கணினி ஒப்புருவாக்கத்தை (Computer Stimulation) பயன்படுத்தி உருகிய சங்கிலி நிலை (Chain – Melted State) என்ற புதிய பருப்பொருளின் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.

விளையாட்டு செய்திகள் 

13. MCC (மரிலேபன் கிரிக்கெட் கிளப்) '‘Honorary Life Members’ விருதை பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹாக்(Inzamam-ul-Haq) மற்றும் தென்னாப்பிரிக்கவின் மார்க் பௌச்சர்(Mark Boucher) ஆகியவற்றிற்கு வழங்கி கௌவுரவித்தது

முக்கிய தினங்கள் 

14. ஏப்ரல் 7 - கங்லா தோங்பி போர் தினம் (Kangla Thogbi War).

15. ஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது நினைவு தினம்.


No comments: