Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 16, 2019


உலக செய்திகள் 

1. நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தை மறுஅளவீடு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

2. பாலஸ்தீன ஜனாதிபதியான மஹ்மூத் அப்பாஸ்(Mahmoud Abbas) பிரதம மந்திரி முகமது இஷ்தாயே(Mohammed Ishtayeh) தலைமையிலான புதிய 24 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவைக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்

3. உலகின் மிகப்பெரிய விமானமான "Roc" Stratolaunch Behemoth கலிபோர்னியாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை ‘Scaled Composites’ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.


4. ரெளட்டர்ஸ் பத்திரிகையின் பத்திரிகையாளர்களான  க்யூ ஸோ ஓ(Kyaw Soe Oo) மற்றும் வோ லோன்(Wa Lone) ஆகியோர் யுனெஸ்கோ / கில்லர்மோ கான் பிரஸ் ஃபிரிடாம்  விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5. உலகின் முதல் நிலம் நீர் இரண்டிலும் செயல்பட கூடிய ஆயுதம் நிறைந்த பீரங்கி Marine Lizard - யை சீனா  வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

தேசிய செய்திகள் 

6. ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ்-இல் வெங்கையா நாயுடு தபால் தலையை வெளியிடுள்ளார்

7. பாரதி ஏர்டெல் நிறுவனம் பிச்சி லேடீஸ் ஆர்கனிசேஷன்(FICCI Ladies Organisation (FLO)) உடன் இணைந்து “My Circle” என்ற மொபைல் செயலியை பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாகியுள்ளது.

8. 4 வது நெகிழ்திறன் நகரங்களுக்கான ஆசியா-பசிபிக் காங்கிரஸ் 2019(4th Resilient Cities Asia-Pacific Congress 2019) புது தில்லியில் நடைபெறவுள்ளது.

9. இந்தியாவின் முதல் கவர்ச்சியான பறவை பூங்கா 'எஸ்செல் வேர்ல்ட் பறவை பூங்கா'( EsselWorld Bird Park) எஸ்செல்வெல்ல்ட் லீஷேர் நிறுவனத்தால் மும்பையில் $ 6 பில்லியன் செலவில் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.

10. பஜாஜ் பின்ஸ்செர்வ்  EMI மூலம் மின் கட்டணத்தை செலுத்த #BijliOnEMI என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

11. செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி பாறையை துளையிட்டு மாதிரிகளை சேகரிக்க கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்கா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் தற்போது நிலத்தடி பாறைகளின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

12. நிர்பாய்(Nirbhay) என்ற இந்திய துணை சூப்பர் சோனிக் குரூஸ் ஏவுகணை ஒடிஷாவின் சண்டிப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள் 

13. கொலோன் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மீனா குமாரி மைஸ்னோம்(மணிப்பூர்)(Meena Kumari Maisnam) 67 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்றார். மேலும் சாக்க்ஷி சவ்திரி(Sakshi Choudhary) 57 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும் ப்விலோ பசுமாட்டரி(Pwilao Basumatary) 64 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றனர். பிங்கி ராணி(Pinki Rani) 51 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கமும் பிரவீண்(Praveen) 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

14. பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான லூயிஸ் ஹாமில்டன் சீன கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்று 75வது பார்முலா 1 பட்டத்தை வென்றுள்ளார். மேலும் இது 1000th ஃபார்முலா ஒன் பந்தயம் ஆகும்.

15. நெதர்லாந்தில் நடைபெற்ற 20 வது விக்டர் டச்சு சர்வதேச பேட்மின்டன் பட்டம் - 2019( 20th Victor Dutch International Badminton title) ஹர்ஷீல் டானி(Harsheel Dani) வென்றார்.