Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 23, 2019







உலக செய்திகள் 

1. சீனாவில் இருந்து அமேசான் நிறுவனம் முற்றிலும் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

2. சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிக நீளமான உள்ளரங்க நீர்விழ்ச்சி(Indoor Water Falls)  அமைந்துள்ளது. இதன் உயரம் 131 அடி.

தேசிய செய்திகள் 

3. தேனி மாவட்ட மேகமலை வனஉயிரின சரணாலயத்தை புலிகள் சரணாலயமாகவும், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள வனப்பகுதியை யானைகள் சரணாலயமாகவும் மாற்ற வனத்துறையானது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

4. “சம்விதான் காவியா” (Samvidhan Kavya) என்ற புத்தகத்தை எழுதிய “சுனில் குமார் கௌதம்” என்பவருக்கு பண்டிட் கோவிந்த் பலாப் பாணட் விருது வழங்கப்பட்டது. இந்த புத்தகம் இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்துச் சட்டங்களும் எளிய மற்றும் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது.

5. “நிர்பயா” திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே அவசர உதவி எண்ணான 112 என்ற அமைப்பில் 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளது.

6. ஸ்டார்ட்அப் பிளிங் (Startup Blink) அமைப்பு வெளியிட்டுள்ள உலக அளவிலான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் பட்டியல் – 2019ல் (Global Startup Ecosystem – 2019) இந்தியாவானது 17வது இடத்தில் உள்ளது. மேலும் இப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாமிடத்திலும் உள்ளது.

7. இந்தியக் கடற்படையானது மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஐ.என்.எஸ். இம்பால் என்ற போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கப்பலானது “திட்டம் 15-பி” (Project – 15P) என்பதன் கீழ் உருவாக்கப்பட்ட மூன்றாவது கப்பலாகும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் இரண்டு கப்பல்கள் முறையே INS – விசாகப்பட்டினம் மற்றும் INS -மர்மகோவ் ஆகும்.

8. 2019ம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமைக்கான விருதானது (National Intellectual Property Award) கேரள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

9. Red Bus  நிறுவனத்தின் விளம்பர தூதுவராக மஹிந்த்ரா சிங்க் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

10. “நிர்பயா” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் 13 மாநிலங்களில் நவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கவுள்ளது.

முக்கிய தினங்கள் 

11. ஏப்ரல் 21 - தேசிய குடிமைப் பணிகள் தினம்  (National Civil Services Day)

12. ஏப்ரல் 22  - உலக புவி நாள் (World Earth Day). இதன் கருத்துரு  “நமது உயிரினங்களை பாதுகாப்போம்” (Protect Our Species)