Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 26, 2019உலக செய்திகள் 

1. அரபு அமிரகத்தின் எட்டிஹாத் ஏர்வேஸை சார்ந்த விமானமான EY484 என்ற விமானம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்ட் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்த முதல் விமானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ‘அகடெமிக் லொமோனிசோவ்’ என்ற பெயரில் உலகின் முதலாவது மிதக்கும் அணு மின் நிலையத்தை ரஷ்யா வெற்றிகரமாக சோதனைசெய்துள்ளது. இது ரஷ்யாவின் அணுசக்தி ஆற்றல் ஒத்துழைப்புடன் ரோசாட்டமின் ஆபரேட்டர் துணை நிறுவனமான ரோசென்கோடோமால்(Rosenergoatom) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

3. சிரில் அல்மேதா என்பவருக்கு பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் இராணுவ உறவுகளின் “விமர்சன” மற்றும் ‘உறுதியான பாதுகாப்பு” ஆகியவற்றில் அவரது பங்களிப்புக்காக 2019 ஆம் ஆண்டில் IPI’s (இன்டர்நேஷனல் பிரஸ் இன்ஸ்டிடியூட்) (International Press Institute) உலக பத்திரிக்கை சுதந்திரத்தின் ஹீரோ (World Press Freedom Hero 2019) என்ற வழங்கப்பட்டுள்ளது.

4. அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது

தேசிய செய்திகள் 

5. இந்திய அமெரிக்கா காலை கழகத்தின் விளம்பர தூதுவராக விகாஸ் கண்ணா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இணைய பாதுகாப்பு காப்பீடு(Cyber Defence Insurance) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

7. இந்தோனேஷியா அரசு இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான 70 ஆண்டு உறவை நினைவுகூரும் வகையில் இராமாயண கருத்திலான தபால் தலையை வெளியிட்டுள்ளது.

8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குனர்  நிர்வாக அதிகாரியாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

9. பழங்குடி இனத்தவர்கள் கொண்டாடும் Garia திருவிழா திரிபுராவில் கொண்டாடப்பட்டது.

10. உலக சுகாதார அமைப்பால் மலேரியாவிற்கான முதல் RTS தடுப்பூசி மாளவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கென்யாவின் கானாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

வர்த்தக செய்திகள் 

11. வாடிக்கையாளர்களை மின்சாரத்தினால் இயங்கும் கார்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் SBI வங்கி முதல் முறையாக இந்தியாவில் “பசுமை கார் கடன்” (Green Car Loan) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

12. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் “Startup India Vision – 2024” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதியதாக தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் வரி சலுகைகள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.

13. வர்த்தக வழித்தட மாநாடு 2019 சீனாவில் நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள் 

14. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மௌத்கில், திவ்யன்ஷ் சிங் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

15. சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், சௌரப் சௌதரி தங்கப்பதக்கத்தை வென்றனர்.

16. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சரிதா தேவி(60), மணிஷா மௌன்(54), சோனியா சஹல்(57), நிகாட் ஸரீன்(51) ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஷிவ தாபா(60), ஆஷிஷ்(69) ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.