Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 24, 2019






உலக செய்திகள் 

1. மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

2. இலங்கையில் உள்ள கொழும்புவில் சீனா அமைத்துள்ள சரக்கு முனையம் மற்றும் துறைமுகத்திற்கு அருகே இந்தியா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் மற்றொரு புதிய சரக்கு முனையம் அமைப்பது குறித்தும், துறைமுகத்தை நிறுவுவது குறித்தும் இந்திய, ஜப்பான் அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய செய்திகள் 

3. நாட்டிலேயே அதிக பெண் உறுப்பினர்களைகொண்ட  நாடாளுமன்றமாக தற்போதைய நாடாளுமன்றம் உள்ளது.

4. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.

5. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளது.

6. 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் நவீன வெடிகுண்டை இந்திய பாதுகாப்புத்துறை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. 500 கிலோ எடை கொண்ட இந்த குண்டு முற்றிலுமாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

7. ஐ.நா.வின் உயரிய அமைதிக் காப்பு விருதான “தனித்துவமான துணிவிற்கான கேப்டன் பேய் டயக்னி விருது” மறைந்த மலாவிய வீரரான ஜான்சி சிட்டிடி என்பவருக்கு வழங்கப்பட்டது.

வர்த்தக செய்திகள் 

8. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI – Reserve Bank of India) “மேற்பார்வையாளர்கள் கல்லூரி” என்ற புதிய நிறுவனத்தை மும்பையில் அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.

விளையாட்டு செய்திகள் 

9. இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவில் அமித் பாங்கல், சிவா தாபா, ஆஷிஸ் உள்ளிட்டோரும் தங்கம் வென்றனர்.