உலக செய்திகள்
1. அமெரிக்காவின் ஹீஸ்டன் பல்கலை கழகத்திலுள்ள கட்டிடம் ஒன்றிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வால்ஆகியோரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
2. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் அத்தி வரதர் பெருவிழா தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தொடங்கப்படவுள்ளது.
3. கேரளாவில் நடைபெற்ற மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019 அழகிப் போட்டியில் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி பட்டம் வென்றார்.
4. ஒசூரில் உள்ள டி.வி.எஸ் தொழிற்சாலையில் 50 ஏக்கர் பரப்பில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயத்தில் 120 வகையான பறவைகள் தங்கியுள்ளன.
5. அதி நவீன விமானம் தாங்கி போர் கப்பலை கட்டமைக்க இந்தியா-பிரிட்டன் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
6. தேசிய சட்ட தீர்ப்பாய உறுப்பினராக நீதிபதி எம்.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. நேட்டோ (NATO) அமைப்பின் Supreme Allied Commander ஆக டோட் டி வோல்டர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. இந்தியாவில் உள்ள அனைத்து மின் வாகனங்களுக்கும் பச்சை நிற எண் பலகையை கட்டாயமாக்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
9. இஸ்ரோ PSLV C 46 இராக்கெட் மூலம் RISAT 2 BR1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
10. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பாவும், ஆண்கள் பிரிவில் இந்திய வீரரான சவுரவ் கோஷலும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
11. போலந்தில் நடைபெற்ற பெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி(52கிலோ), மணீஷ் கவுஷிக்(60கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.
இரங்கல்
12. கர்நாடகாவை சேர்ந்த சமண பெண் துறவியான சுந்தரமத் பிரபாவதி மேல்சித்தனுரில் வடக்கிருந்து உயிர்துறந்தால் முறையில் உயிர்துறந்தார்.
முக்கிய தினங்கள்
13. மே - 4 சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
No comments:
Post a comment