Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 12, 2019








உலக செய்திகள் 

1. இந்திய விமானப்படை 100ற்கும் மேற்பட்ட ஸ்பைஸ் (SPICE) குண்டுகளை வாங்குவதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துடன் ரூ 300 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

2. வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மீதான G- 20 அமைச்சரவை மட்டத்திலான சந்திப்பு ஜப்பானிய நகரான ஃப்யூகூவோகாவில் (Fukuoka) நடத்தப்பட்டது.

3. அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 2-வது உலக மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு (Global Disability Summit) நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தல்வார்சந்த் கெலாட் தலைமையிலான குழு பங்கேற்கிறது.

தேசிய செய்திகள் 

4. டெல்லியில் இருந்தபடியே தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அனுமதி, நிதி போன்றவற்றை பெறுவதற்கு புதிய அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை துணைச்செயலாளர் சு. ராதாகிருஷ்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. மத்தியப்பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கான தீர்மானம், அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

6. ஹரியானாவில் வாழும் மனிதர்களைப் போன்று அங்கு வாழும் அனைத்து விலங்குகளும் சட்டப்பூர்வ உரிமைகள் பெற்ற சட்டமுறை நபர்கள் என சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7. 2019 ஆம் ஆண்டு ஜீன் 8 ஆம் தேதி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி மகோசாகர் மாவட்டத்தின் பாலசினூரில் உள்ள ரெயியோலி கிராமத்தில் புதிய டைனோசர் அருங்காட்சியகம் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார்.

8. முதன்முறையாக சன்டோங் மாகாணத்தின் மஞ்சள் கடலில் நகரக்கூடிய ஏவு தளத்திலிருந்து “லாங் மார்ச் 11” என்ற ஒரு ஏவு வாகனத்தை சீனா ஏவியுள்ளது.




No comments:

Post a Comment