Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 14, 2019









உலக செய்திகள் 

1. டாம் டாம் என்ற நிறுவனம் ‘Traffic Index – 2108’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், நெரிசல் அளவு 65 சதவீதத்துடன் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளது. இதில் கொலம்பியா தலைநகர் போகோடா (63%) 2 ஆவது
2. இடத்திலும், பெரு தலைநகர் லிமா (58%) 3 ஆவது இடத்திலும்,புது தில்லி 4 ஆவது (58%) இடத்திலும் உள்ளது.

3. அமெரிக்க எழுத்தாளரான தயாரி ஜோன்ஸ்“An American Marriage” என்னும் தனது புதினத்துக்காக நடப்பாண்டின் புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசை வென்றுள்ளார்.

தேசிய செய்திகள் 

4. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக அறக்கட்டளை மற்றும் மத்திய கிடங்குக் கழகம் ஆகியவை நேரடித் துறைமுக நுழைவு (Direct Port Entry) வசதிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

5. 2020 ஆம் ஆண்டின் சுவச் சர்வேக்சான் குழு (SSL – 2020 – Swachh Survekshan League) வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியாஸ் தொடங்கப்பட்டுள்ளது.

6. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள இந்தியத் தொல்லியல் துறை ஆய்வகம் சவுக்கண்டி ஸ்தூபியைத் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக” அறிவித்துள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் சாரநாத்தில் அமைந்துள்ளது.

7. மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் பணித்துறை புள்ளியியல் மீதான ஒரு “தேசியத் தகவல் கிடங்கை” அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

8. 2024 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.

வர்த்தக செய்திகள் 

9. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ஏ.டி.எம். கட்டணங்கள் மற்றும் மற்ற கட்டணங்கள் முழுவதையும் ஆய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) தலைமை நிர்வாகியான வி.கே. கண்ணன் தலைமையில் ஒரு உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.






No comments:

Post a Comment