Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 15, 2019









உலக செய்திகள் 

1. இந்திய ரயில்வே நிலையம் மேம்பாட்டுக் கழகம் (IRSDC) இந்தியாவில் ரயில்வே நிலையம் மேம்பாட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக பிரெஞ்சு தேசிய இரயில்வே(SNCF) & AFD என்ற பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தேசிய செய்திகள் 

2. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய அரசியலமைப்பின் 356 (4) என்ற இந்திய அரசியலமைப்பின் கீழ், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவில் முன்னிலையில் உள்ள சமகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

4. மூத்த இந்தியக் காவல் துறை அதிகாரியான VSK கமுதி என்பவர் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (BPR&D – Bureau of Police Research and Development) பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

5. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவானது விண்வெளிப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பை (DSRA – Defence Space Research Agency) அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

6. அமெரிக்காவானது நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் தேசிய மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு – II (NASAMS – II)என்பதினை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது

விளையாட்டு செய்திகள் 

7. சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பு மன்றம் (International Association of Athletics Federation) “உலகத் தடகளம்” என்று தனது பெயரைத் தானே மாற்றிக் கொண்டுள்ளது.

8. 2019 ஆம் ஆண்டின் ITTF உலக ஹாங்காங் ஓபன் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் என அனைத்து 4 தங்கப்பதக்கங்களையும் சீனா வென்றுள்ளது.

முக்கிய தினங்கள் 

9. ஜூன் 13 அன்று உலக அளவில் சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day). இத்தினத்தின் கருத்துரு “இன்னும் உறுதியுடன் எழுந்து நில்”(Still Standing Strong) என்பதாகும்.







No comments:

Post a Comment