Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 16, 2019






உலக செய்திகள் 

1. சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம், மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ரியாத்தில் “அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணி”யை நடத்தியது. இச்சைக்கிள் பேரணியானது Diplomatic Quarter Authority உடனும், சவுதி சைக்கிளிங் கூட்டமைப்புடனும் இணைந்து நடத்தப்பட்டது

தேசிய செய்திகள் 

2. வடகிழக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் “நெல் தவளை” என்ற ஒரு புதிய இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

3. மாலத்தீவில் அயல் நாட்டவருக்கு வழங்கப்படும் மிகவுயரிய விருதான “நிஷான் இஸ்ஸ{தின் -Nishan Izzuddin” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள் 

4. வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD)  வெளியிட்டுள்ள உலக முதலீட்டு அறிக்கை 2019இன் படி இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (FDI) 6% அதிகரித்து 2018-ல் 42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

5. மார்ஷல் தீவுடன் வரிப் பரிமாற்றம் ஒப்பந்தம் (TIEA – tax information exchange agreement) ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

6. தென் அமெரிக்காவின் கால்பந்து நடத்தும் குழுவான CONMEBOL, ஆஸ்திரேலியா மற்றும் கத்தாரை 2020 கோபா அமெரிக்காவில் – (COPA America) பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய தினங்கள் 

7. ஜுன் 14 - உலகம் முழுவதும் உலக குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இத்தினத்தின் கருத்துரு “அனைவருக்குமான பாதுகாப்பான இரத்தம்” (Safe blood for all) என்பதாகும்