Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 10, 2019உலக செய்திகள் 

1. வாஷிங்டனை தளமாகக் கொண்ட அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF) என்ற அமைப்பினால், ECB (ஐரோப்பிய மத்திய வங்கி) யின் முதல் பெண் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) தலைமை தாங்கவுள்ளார்.

2. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில், நாட்டின் பல சுற்றுலா தலங்களை முன்னிலைப்படுத்த நேபாள சுற்றுலா வாரியம் இந்தியாவில் “நேபாளத்தை பார்வையிட 2020” என்ற திட்டத்தை இங்கு ஏற்பாடு செய்து வருகிறது.

3. ஆபரேஷன் சுதர்ஷன் என்ற திட்டத்தை பஞ்சாப் மற்றும் ஜம்மு ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவலை தடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை தடுப்பு சுவரை அமைக்கவுள்ளது.

தேசிய செய்திகள் 

4. உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் 24×7 கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணான  1076- ஐ அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய முடியும்.

5. இந்தியா, பிரம்மோஸ் என்ற சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ சுகோய் 30 போர் விமானங்களில் இருந்து 500 கி.மீ சுற்றளவில் உள்ள இலக்கை தாக்ககூடியது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இந்தியா மற்றும் ரஷ்யா அரசாங்கங்களுக்கு சொந்தமான ஒரு கூட்டு நிறுவனமாகும்.

6. பேஷன் டிசைன் துறையில் நகரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையம் ‘ஃபேஷனோவா’ (Fashionova) ஜவளி நகரமான சூரத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

7. பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மற்றும் ஜம்முவில் ஊடுருவல் தடுப்பு கட்டத்தை பலப்படுத்த (Anti-Infiltration Grid) எல்லை பாதுகாப்பு படையால் (Border Security Force-BSF) “சுதர்ஷன்” என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டது.

8. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் மற்றும் பெண்கள் அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய திட்டமான பேட்டி பச்சாவ் பேடி பதாவோ (Beti Bachao Beti Padhao-BBBP) திட்டத்தின் கீழ் நாட்டின் சிறந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பேட்டி பச்சாவ் பேடி பதாவோ திட்டம் ஹரியானா மாநிலத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

9. ஒடிசாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி எம்.நாகேஸ்வர் ராவ் தனது தற்போதைய சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மத்திய அரசால் தீயணைப்பு சேவைகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவலர் படைகளின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்;பட்டுள்ளார்.

10. “அமித்ஷா மற்றும் பாஜகவின் பயணம்” எனும் புத்தகம் அனிர்பன் கங்குலி மற்றும் சிவானந்த் திவேதி ஆகியோரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.

11. இந்தியா, 1800 பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கு 2019-2025 இல் உத்தரகண்ட் மாநிலத்தின் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்க்கு முன் 1500 ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

12. உலகின் மிகப்பெரிய எரிகாயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனமான ஷேக் ஹசினா நேஷனல் பர்ன் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இன்ஸ்டிடியூட் பங்களாதேஷின் டாக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

13. இந்திய உதவியுடன் இலங்கை கம்பஹாவில் உள்ள ரணிடுகாமாவில் முதல் மாதிரி கிராமத்தை தொடங்கியுள்ளது.

14. ஜெனரல் எம்.நாகேஸ்வர் ராவ் தீயணைப்பு சேவைகள், சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டுக் காவல்படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

15. பிரான்சின் லியோனில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா FIFA மகளிர் உலக கோப்பை 2019 பட்டத்தை வென்றது.

16. மாட்ரிட்டில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்பெயின் மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகாட்(53Kg) மற்றும்  திவ்யா கக்ரான்(68Kg) தங்கம் வென்றனர். மேலும் பூஜா தண்டா(57Kg) வெள்ளி வென்றார்

17. போலந்தில் நடந்த 2019 குட்னோ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹிமா தாஸ் (200m race) மற்றும் முகமது அனஸ் (200m race) தங்கப்பதக்கம் வென்றனர்.


No comments: