Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 15, 2019







உலக செய்திகள் 

1. நியூசிலாந்து அரசு பொதுமக்களின் நலன் கருது தானியங்கி துப்பாக்கிகளை திரும்ப பெற்றுள்ளது. மேலும் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

2. முதல் உலக ஊடக சுதந்திர கருத்தரங்கம் - 2019 (Global Conference for Media Freedom 2019) லண்டனில் நடைப்பெற்றது.

3. உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அனுஷீலா கந்த்(Anushula Kant) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக வங்கியின் முதல் பெண் தலைமை நீதியியல் அலுவலகர் ஆவர்

தேசிய செய்திகள் 

4. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்ட ஆண் பெண் பாலின பிறப்பு விகிதம் 2019 ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தனர்.

5. தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பார்கோடு(BARCODE) மூலம் மாணவ-மாணவிகளின் முக்கியமான தகவல்களை பெற முடியும்.

6. கிராமப்புறங்களில் ஸ்விட்ச் பாரத் திட்டத்தின் கீழ் ODF என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம புறங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைக்கப்படவுள்ளது. இதில் 700 கோபர்தன்(சாணஎரிவாயு ஆலைகள்) நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

7. கேரளா தொடக்க உச்சி மாநாடு(Kerala Startup Mission) கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது. இதன் நோக்கம் முதல் முறையாக தொழில்தொடங்கும் பெண்களை ஊக்குவிப்பதாகும்(“Developing an Inclusive Entrepreneurship Ecosystem”).

8. 11வது தமிழ் மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது உலக தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்றது.

9. ”மிஷன் ரக்ஷா கியான் சக்தி” (Mission Raksha Gyan Shakti) என்ற திட்டத்தின் கீழ் அறிவுசார் சொத்துரிமை ஏற்பாட்டு பிரிவிற்கும் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தேசிய ஆராய்ச்சி மேம்பட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த இடம் 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவதற்காக தொடங்கப்பட்டது.

10. இரயில் மற்றும் இரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் விற்பனையை தடுக்க இரயில்வே பாதுகாப்பு படையானது "தாகம் நடவடிக்கை"(Operation Thirst) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

11. இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் தங்கம் வென்றார். இவர் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை வீழ்த்தினார்.

முக்கிய தினங்கள் 

12. ஜூலை 12 - நபார்டு(NABARD) வங்கி 38ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியது. தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி 1982 ஆம் ஆண்டு சிவராமன் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.