Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 22, 2019






உலக செய்திகள் 

1. 2019 ஆம் ஆண்டில் சிப்ரி ஆண்டறிக்கையின் சிறப்பம்சங்களை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute-SIPRI) வெளியிட்டுள்ளது.

தேசிய செய்திகள் 

2. நிதி ஆயோக் 2030ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாகனங்கள் (EV-Electronic Vehicles) மட்டுமே விற்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

3. மத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது நாட்டில் போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

4. பெண்கள் டென்னிஸ் மன்றத்தின் (WTA-Women’s Tennis Association) தரவரிசையில் ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசாகா என்பவர் முதலிடத்தில் உள்ளார். டென்னிஸ் தொழில்சார் மன்றத்தின் ஆண்கள் தரவரிசையில் செரிபியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக் முதலிடத்தில் உள்ளார்.

முக்கிய தினங்கள் 

5. ஜுன் 19 - உலக அரிவாள் உயிரணு (செல்)(SCD-Sickle cell disease) தினம் அனுசரிக்கப்படுகின்றது.

6. ஜூன் 20 -  உலக அகதிகள் தினம். இதன் கருத்துரு # அகதிகளுடன் ஒரு படி - உலக அகதிகள் தினத்தில் ஒரு படி எடுக்கவும் ( # Step With Refugees – Take A Step on World Refugee Day).