Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 26, 2019





உலக செய்திகள் 

1. UNICEF அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ணத் தூதராக இருந்து வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு, வரும் டிச. 3 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், டேனி கே மனிதாபிமான விருது (Danny Kaye Humanitarian Award) வழங்கப்படவுள்ளது.

தேசிய செய்திகள் 

2. கர்நாடக முதலமைச்சர் H. D குமாரசாமி, அண்மையில் 118 வலைத்தளங்களைத் தொடங்கிவைத்தார். அவற்றின் மூலம், கட்டட வரைவுப் படங்களுக்கான ஒப்புதல்கள், நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் பிற தொடர்புடைய அனுமதிகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெற முடியும்.

3. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களில் (Other Backward Classes) உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற சிக்கலை ஆராய்ந்திடுவதற்காக அமைக்கப்ட்ட குழுவின் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு, அதாவது 31 ஜீலை 2019 வரை, நீட்டிப்பு செய்வதற்கான தனது பின்னேற்பு ஓப்புதலை (ex- post facto approval) மத்திய அமைச்சரவை வழங்கியள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 340 இன் கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் காலம், 6வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

4. நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (FSDC- Financial Stability and Development Council) 20- வது சந்திப்பானது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

5. மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய இணையமைச்சர் சூரிய/ காற்றாலைத் துறைக்கான பிரச்சனைக்குத் தீர்வு காணும் குழுவினை (Dispute Resolution Committee- DRC) அமைப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

6. மக்களின் பரிந்துரைகள் மற்றும் ஈடுபாட்டுடன் மத்தியப் பிரதேச அரசு “தண்ணீரைச் சேமித்தல்” பிரச்சாரத்தை ((“Save Water” campaign) நடத்தவுள்ளது. இந்த நோக்கத்திற்காக மாநில அளவிலான “ நீர் செல்” அமைக்கப்பட்டுள்ளது.

7. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தொடங்க மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

8. எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துதல் மற்றும் அவற்றிக்கு ஆதரவளித்தல் தொடர்பாக இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC- International Olympic Committee) நீக்கியுள்ளது.