Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 8, 2019






உலக செய்திகள் 

1. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநராக குயு டோங்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவின் துணை வேளாண் துறை அமைச்சராக உள்ளார்.

தேசிய செய்திகள் 

2. “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற கிராமப்புற பிரதமர் வீட்டு வசதி திட்டதின் மூலம்  “அனைவருக்கும் வீடு” என்ற கொள்கைக்கு இலக்காக 2020 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதியத்திற்காக  “பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்” என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ..5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட சுமார் 3 கோடி சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

4. யுனஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூரும் இடம் பிடித்துள்ளது.

5. மேகாலயாவின் மாண்டரின் ஆரஞ்சு பழம் அதிக வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை பெற்றுள்ளதால் இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

6. அரசாங்கத்தின் லட்சியத் திட்டமான “ஸ்வச் பாரத் மிஷன் (கிராமின்)” கீழ்  9 கோடி 62 லட்சம் தனிநபர் வீடுகளுக்கு கழிப்பறைகள் 2014 முதல் கட்டப்பட்டுள்ளன என்று ஜல் சக்தி அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறங்களில் துப்புரவு பாதுகாப்பு 2014 இல் 38% ஆக இருந்தது தற்போது 99% ஆக உயர்ந்தது.

7. ஒடிசாவில் ஃபானி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாங்காங்கின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சுமார் $9,02,278 (7.032 மில்லியன் ஹாங்காங் டாலர்கள்) வழங்க ஹாங்காங் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

8. மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வாரந்தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்காக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் சத்தீஸ்கர் ராய்ப்பூரில் "ஜன் சோபால்"(Jan Choupal) என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

9. திரிபுராவின் கிராமப்புறங்களில் அரைகுறை கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதற்கும், சாலைகள் பராமரிப்பதற்கும் மத்திய அரசின் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் கூடுதலாக ரூ .358 கோடி வழங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

10. 2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2019-ம் ஆண்டு சிறந்த அணியாக விதர்பா கிரிக்கெட் அணியும், விளையாட்டு துறையின் சிறந்த வீரராக பங்கஜ் அத்வானி (பில்லியர்ட்ஸ் &  ஸ்நுக்கர்) மற்றும் பஜ்ரங் பூனியாவும் (குத்துச் சண்டை), 2019 வளர்ந்து வரும் வீரராக சௌரப் சௌத்திரியும் (துப்பாக்கிச் சுடுதல்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

11. இத்தாலியின் நாப்போலியில் நடைபெற்ற 30 வது உலக பல்கலைக்கழக கோடை விளையாட்டு போட்டி 2019-யில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் மூன்று முறை ஜூனியர் உலகக் கோப்பை பதக்கம் வென்ற எலவெனில் வலரிவன் (19) தனது வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

முக்கிய தினங்கள் 

12. ஜூலை 6 - உலக உயிரியல் நாள்.