Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 27, 2019






தேசிய செய்திகள் 

1. மத்தியப் பிரதேச சட்டமன்றம் மத்தியப் பிரதேச பொதுச் சேவை (பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு) திருத்தம் மசோதா 2019 ஐ அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி (OBC) இட ஒதுக்கீடு தற்போதைய 14மூ இலிருந்து 27மூ ஆக உயர்த்தியது.

2. பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of children from Sexual Offences – POCSO) (திருத்தம்) மசோதா, 2019 ஐ மாநிலங்களவை நிறைவேற்றியது, இது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

3. ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், மாநிலங்கள் இடையேயான நதி நீர் தகராறு (திருத்தம்) மசோதா 2019 ஐ அறிமுகப்படுத்தினார்.

4. புது தில்லியில் இருந்து கத்ரா (ஜம்மு-காஷ்மீர்) பாதையில் இந்தியாவின் வேகமான இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது) சோதனை ஓட்டம் இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

5. மனிதர்களில் காலிஸ்டினின் பாதிப்பைக் குறைக்கும் ஒரு முயற்சியாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமானது காலிஸ்டினின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தையும், உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகள், கோழி, நீர் வாழ் உயிரிகள் மற்றும் விலங்கு தீவனங்களுக்கான அதன் உற்பத்தியையும் தடைசெய்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

6. சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் பேட்ஸ்மேனின் தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (913) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் சேடேஷ்வர் புஜாரா (881) தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

7. ஜூலை 29 ஆம் தேதியன்று நடைபெறும் மோகுன் பாகன் மன்றத்தின் வருடாந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்றவரான கேசவ் தத் மற்றும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து அணி தலைவரான பிரசூன் பானர்ஜி ஆகியோருக்கு “மோகுன் பாகன் ரத்னா” விருது வழங்கப்படவிருக்கின்றது.

முக்கிய தினங்கள் 

8. ஜுலை 26 - கார்கில் வெற்றி நாள். இதன் கருப்பொருள் “Remember, Rejoice and Renew – நினைவுகூர், மகிழ் மற்றும் புதுப்பி” என்பதாகும்.

9. ஜுலை 24 - மத்திய நேரடி வரி வாரியம் (Central Board od Direct Taxes – CBDT) மற்றும் அனைத்து கள அலுவலகங்களும் 159 வது ஆய்கர் திவாஸை (Aaykar Diwas வருமான வரி நாள்).




No comments: