Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 27, 2019





உலக செய்திகள் 

1. உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. இந்த அணுவுலையானது அகாடெமிக் லோமோனோசோவ் என்ற மிகப்பெரிய கப்பலில் ரஷ்யா உருவாக்கியுள்ளது.

2. வடகொரியா சூப்பர்லார்ஜ் ராக்கெட் என்ற நவீனரக ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

தேசிய செய்திகள் 

3. இந்தியா மற்றும் பக்ரைன் இடையே நட்புறவு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மேலும் கலாச்சாரம், விண்வெளி தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

4. விண்வெளிக்குமுதல்முறையாகமனிதர்களைஅனுப்பும்இந்தியாவின் “ககன்யான்’ திட்டத்துக்காக, ரஷியாவின் விண்வெளி ஆய்வுமையத்தில் இந்தியவிண்வெளிவீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

5. புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறியும் Once Discover என்ற தொழில்நுட்பத்தை டாக்டர் ஜெயந்த் கந்தாரே தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

6. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசியலமைப்பின் 370-வது பிரிவின்படி அந்த மாநிலத்திற்கு தனிகொடி என்ற சலுகையை வழங்கப்பட்டிருந்தது.

7. ஸ்ரீ கிங் ஹமத் ஆர்டர் ஆப் ரினைசன்ஸ் என்ற பஹ்ரைனின் உயரிய விருதை பஹ்ரைன் அரசு பிரதமர் மோடிக்கு வழங்கியது.

வர்த்தக செய்திகள் 

8. ரூ.50கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க புதிய குழு ஒன்றை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக சிவிசி முன்னாள் ஆணையர் டி.எம்.பாசின் ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

9. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்