தேசிய செய்திகள்
1. தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
2. மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தில்(“PM – KISAN”) தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கவுள்ளது.
3. 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி மதுராவில் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் புரூசெல்லா நோயை 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது.
4. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுள்ள பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை (எம்பி-ஏடிஜிஎம்) “பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஒ) ஆந்திர மாநிலம் கர்னூலில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
5. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்பு.
விளையாட்டு செய்திகள்
6. உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் கத்தாருடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டிரா செய்தது.2023 பிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது.