தேசிய செய்திகள்
1. நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதையை ஆந்திராவில் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். இந்த இரயில் பாதை செர்லோபள்ளி – ராபூரு வரை 7 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
2. ஆதார் மூலம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தால் பான் எண் வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
3. கிழக்கு ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
4. அபிநந்தனுடன் மிக் – 21 ரக போர் விமானத்தில் பறந்தார் தலைமை தளபதி பி.எஸ் தனோவா.
5. சந்திராயன் – 2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை வெற்றிகரமாக பிரித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை. ஆர்பிட்டர் பகுதி தனியாகவும், லேண்டர் பகுதி தனியாகவும் நிலவைச் சுற்றி வருகின்றன.