தேசிய செய்திகள்
1. தமிழகத்தில் சேலம், மதுரை உள்பட 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் விரைவில் அதி நவீன சிறப்பு மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும் என மத்திய துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார்.
2. நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் (ஆர்பிட்டர்) நல்லபடி செயல்பட்டு வருகிறது என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) திருப்தி தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
3. துலிப் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய கிரீன் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ரெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களுருவில் நடைபெற்றது.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர்.
இரங்கல்
5. பிரபா மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி (95) தில்லியில் காலமானார்.