RRB TAmil Current Affairs 29th April 2018

உலக செய்திகள்
  1. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் மியான்மர் விவரங்களுக்கான ஐ.நா சிறப்பு தூதராக கிறிஷ்டீன் ஷ்ரானெர் நியமித்துள்ளார்.
  2. ரஷ்யா ராணுவ அதிகாரி செர்கி ருட்ஸ்கோய் ரஷ்யா தன்னிடம் உள்ள எஸ்.300ரக ஏவுகனைகளை விரைவில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  3. இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளதை அடுத்து இரு நாடுகளும் தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படும் என்பதை தெரிவித்துள்ளார்.
  4. ஐரோப்பிய யூனியன் தேனீக்களை கொல்லும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜம்மு காஷ்மீர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. புதுச்சேரியில் செய்திகள் மற்றும் விளம்பர துறை இயக்குநராக "வினையராஜ்" நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியானது அடுத்த ஆண்டு ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக ஃபிட்ச் மதிப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
  2. நிதி அமைச்சகம் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பி. எப் வட்டி விகிதத்தை55 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
  3. இண்டிகோ விமான நிலையத்தின் ஆதித்யா கோஷ் தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
  4. இந்திய மாருதி சுசுகி நிறுவனத்தின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 1,882.1 கோடியாக அதிகரித்துள்ளது.
  5. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 9,435 கோடியாக அதிகரித்துள்ளது.
  6. ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ 687 கோடியாக உள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி "பேட்டிள் ஆப் சேப்பாக் 2" என்ற மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  2. தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
  3. ஐ.பி.எல் இன் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரீஸ் விலகியதை அடுத்து தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.
  4. ஆசிய இளையோர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில் 48 கிலோ எடை பிரிவில்
  5. நீது காங்கஸ் , 64 கிலோ எடை பிரிவில் மனிஷா,69 கிலோ எடை பிரிவில் லலிதா தங்கமும் 51 கிலோ எடை பிரிவில் அனாமிகா , 81 கிலோ எடை பிரிவில் சாக்ஷி வெள்ளி பதக்கமும் ஆடவர் 60 கிலோ எடை பிரிவில் அங்கிட் காட்னா வெள்ளி பதக்கமும் வென்றனர்.
Previous Post Next Post
Youtube   ChennalWhatsapp AlertTelegram Alert
SubscribeSubscribeSubscribe
Instagram AlertFacebook AlertTwitter Alert
SubscribeSubscribeSubscribe