நடப்பு நிகழ்வுகள் மார்ச் 24, 2019

உலக செய்திகள் 
1. கஜகஸ்தான் தனது நாட்டின் தலைநகரத்தின் பெயரை “அஸ்தானா” என்பதை நுர்சுல்தான் (Nursultan) என மாற்றம் செய்துள்ளது.
தேசிய செய்திகள் 
2. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கடல்நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யும் வழிமுறையை ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3. தமிழகத்தின் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக “ஜான் மகேந்திரன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2018) வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவை குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் உட்பட “24” மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. பெனடிக்ட் கம்பெர்பாட்ச்(Benedict Cumberbatch) இந்திய நடவடிக்கைக்காக மோரிஸ் கார்ஜஸின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
6. இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பணம் பரிவர்த்தனை தளமான போன்பேவின் (PhonePe) பிராண்ட்  தூதராக ஆமிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள் 
7. பிட்ச் வெளியிட்டுள்ள "உலகளாவிய பொருளாதார அவுட்லுக்கில்" இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% (ஏப்ரல் 1, 2019 - 31 மார்ச் 2020) இருக்கும் என தெரிவித்துள்ளது.
முக்கிய தினங்கள் 
8. மார்ச் 23 - உலக வானியல் தினம் (World Meteorological Day). இதன் மையக்கருத்து:- “சூரியன், பூமி மற்றும் வானிலை” (The Sun, The Earth and The Weather) என்பதாகும்.
Previous Post Next Post
Youtube   ChennalWhatsapp AlertTelegram Alert
SubscribeSubscribeSubscribe
Instagram AlertFacebook AlertTwitter Alert
SubscribeSubscribeSubscribe