Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 14th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
14.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது துணை உதவியாளராகவும், தகவல் தொடர்புத் துறை துணை செயலராகவும்ராஜ் ஷா”(இந்திய வம்சாவளி) நியமித்துள்ளார்.
2.    சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக அந்நாட்டு நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவர்ஹலீமா யாக்கோப்தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.    உலகின் மிக உயரமான மணல் கோட்டை அமைத்து ஜெர்மன் மணல் சிற்பக் கலைஞர்கள் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர். (இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டது).
4.    பச்சைக்குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இங்க் நச்சு துகள்கள் கொண்டுள்ளதால் அது உடலின் உள்ளே சென்று நிணநீர் முடிச்சுகளை பெரிதாக்கி நோய் எதிப்பு சக்தியை கடுமையாகப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
5.    இந்தியாஜப்பான் இடையோன 12வது வருடாந்திர மாநாடு இன்று(செப்டம்பர் 14) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
6.    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரி சீர்த்திருத்த சட்டப்படி அதிக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் அதிகமான வரியை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
7.    அமெரிக்காவில் வெளிநாட்டு அகதிகள் நுழைவதற்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8.    சிட்னி(ஆஸ்திரேலியா) நகரில் உள்ள கடற்கரையில் ஒபேரா ஹவுஸ் உள்ளது. இங்கு செயற்கை கடற்பாறைகளை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர். செயற்கை பாறை அமைப்பதால் அப்பகுதியில் வளங்களை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
9.    ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. தற்போது உள்ள மக்கள் தொகையை காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் கங்காரு இனம் உள்ளது.
தேசிய செய்திகள்
10. தெலுங்கானா மாநில பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக்க முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
11. இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்கானகிரீமி லேயர்வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
12. இரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்கிறவர்கள் அடையாள அட்டையாக மொபைல் ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பானயுஐடிஏஐ’, ‘எம் ஆதார்என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
13. வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டும் 1222 தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய வங்கி கணக்குகளை சட்டப்படி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
14. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் மற்றும் பாடம் நடத்தாமல் சம்பளம் வாங்குவதைத் தடுக்கடிஜிட்டல்விபர பதிவு அமலுக்கு வருகிறது.
15. இந்தியாவிலேயே ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மருத்துவப் பணியாளர் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
16. தமிழகத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக தனுஷ்கோடி உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனுஷ்கோடி வருகின்றனர்
17. ஜன் தன் யோஜனாதிட்டத்தின் கீழ் 30 கோடி குடும்பங்கள் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
18. வாஸ்கடுவாவில்(இலங்கை) 2வது மேற்காசிய அளவிலான செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த ரிஷப் ஷா என்ற சிறுவன் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் பிளிட்ஸ் முறையில் 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்
19. ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான 63வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பார்சிலோனாவில் தொடங்கியது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் இத்தொடரில் 32 அணிகள் பங்கு பெறுகின்றன.
20. 57வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 70வது வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
21. கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் (தென்கொரியா தலைநகர் சியோ) இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
22. சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
23. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாகனடா இடையிலானஉலக குரூப் பிளே ஆஃப் சுற்றுசெப்டம்பர் 15 முதல் 17 வரை எட்மான்டனில்(கனடா) நடைபெறவுள்ளது.
24. அஞ்சல் துறை சார்ப்பில் நடைபெறுகிற 31வது அகில இந்திய கபடி போட்டியில் தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
வர்த்தக செய்திகள்
25. வலைதளத்தில் மின்னணு பரிவத்தனைகளுக்கு மட்டும் பயன்படும்டிஜிட்டல்முறையை சட்டப்பூர்வ மதிப்புடன் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
26. வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டும் அந்த சேவைக் கட்டணத்தை வருமான வரிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
27. திவால் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு(12) வருமானவரி மற்றும் குறைந்த பட்ச மாற்று வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி சேவைகள் துறைக்குஅசோசெம்வலியுறுத்தியுள்ளது.
28. நடப்பு நிதி ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரிக்கு பிறகு தொழில் துறையில் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் என்று ஜப்பானை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான நொமுரா தெரிவித்துள்ளது.
29. பங்குச் சந்தையில் வர்த்தக நேரத்தை உயர்த்தும் திட்டம் ஏதுவும் இல்லை. தற்போது போல 9.15am – 3.30pm வரை பங்கு சந்தைகள் செயல்படும் என்று பிஎஸ்இ தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் கூறியுள்ளார்.
30. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்கள் ரூ.62000 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கின்றனர். நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடி மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர் என்று இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனமான ஆம்பி தெரிவித்துள்ளது.
31. உலக புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் தனது புதிய தயாரிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு(2017) முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்என்ற புதிய 2 ஐபோன்களை வெளியிட உள்ளது.


Post a Comment