Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 28th September 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
28.09.2017
------------------------------------------------------
                       இந்திய நிகழ்வுகள்
1.    பெட்ரோல் மற்றும் டீசல் விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
2.    இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று தேசிய ஊட்டச்சத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
3.    நாடு முழுவதும் ரூ.25060 கோடியில் போலீஸ் துறையை நவீனமயமாக்குவதற்கு மத்திய மந்திரி குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டள்ளது.
4.    ரெயில்வே துறையில் பணியாற்றுகிற டாக்டர்கள் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது
சர்வதேச நிகழ்வுகள்
5.    அமெரிக்காவில் அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ள நிதி ஆண்டில் 45 ஆயிரம் அகதிகளை சேர்த்துக் கொள்ள டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
6.    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புத்தகம்(காபி டேபிள் புத்தகம்) வாஷிங்டனில் (அமெரிக்கா) வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தைசுலாப் இன்டர்நேஷனல்தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் எழுதி உள்ளார்.
7.    ஈராக்கில், மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ஆண்ட பழைமையான நகரத்தை(கலட்கா டர்பாண்ட்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
8.    தைவான் தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் பள்ளி(விழுதுகள்) திறப்பு விழா மற்றும் (சீனராக இருந்த போதும் தமிழ்மேல் கொண்ட பற்றுதல் காரணமாக) தமிழ் இலக்கியங்களை சீன மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் புலவர் யூ.சி. அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
9.    தாய்லாந்தில் மானிய விலை மற்றும் விவசாயிகளுக்கு அரிசி வழங்குவதில் ஊழல் செய்யததாக குற்றம் சாட்டப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர்யிங்லக் ஷினவத்ராவுக்கு” 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
10. ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா மகாணம் தனிநாடாக பிரிவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
11. இலங்கையில் உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை, தடை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
12. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதால் மலேசிய மக்கள் வடகொரியாவிற்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
வங்கி மற்றும் நிதிதுறை நிகழ்வுகள்
13. ஜன் தன் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் ரூ-பே டெபிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என நிதி சேவைகள் செயலரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்
வணிக நிகழ்வுகள்
14. ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின் 2017 – 2018 ஆண்டுக்கான தலைவராக என். மகாவீரசந்த் துகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிந்துஸ்தான் வர்த்தக சபை சார்பில் 71வது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று(செப்டம்பர் 27) நடைபெற்றது.
15. ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
16. பொதுத் துறை நிறுவனமான .என்.ஜி.சி எண்ணெய் கிணறுங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
17. உலக பொருளாதார மன்ற குறியீட்டு எண் அடிப்படையில் உலக பொருளாதார நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 40வது(137 நாடுகள்) இடத்தில் உள்ளது
18. அதிக வரி மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
19. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணையும் நடவடிக்கை அடுத்த ஆண்டில் முழுமை பெறும் என்று வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுநில் சூட் தெரிவித்தார்.
விருதுகள் & அங்கீகாரம்
20. தமிழ் நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்த வெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது என்று கலெக்டர்சஜ்ஜன்சிங் சவான்தெரிவித்துள்ளார்.
21. குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் முதலிடம் உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
22. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களுரில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது.
23. இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு இன்று நடைபெறும் 4வது ஒரு நாள் போட்டி 100வது ஒரு நாள் போட்டியாகும்.
24. தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 90 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
25. சென்னையில் நடந்து வரும் தேசிய தடகள போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
26. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர்(கிரிக்கெட் ஆப்ரேட்டிங்) பொறுப்பில் இருந்து எம்.வி. ஸ்ரீதர் விலகியுள்ளார்.
27. புதுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கும் இடையிலான மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
28. சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா) நகரில் நடைபெற்ற சான் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மகளிருக்கான பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் காலியிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
முக்கிய நாட்கள்
29. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காந்தியடிகளின் வரலாற்றை விவரிக்கும்காந்திஜி சர்வோதய் உனக்குள் அறியஎனும் திட்டத்தை தொடங்க உள்ளதாக மகாத்மா காந்தி அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது


No comments: