Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Current Affairs 10th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
10.10.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய தளம் வாயிலாக இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ்(எஸ்.பி.எஸ்) நிலையம் துபாயில் செயல்பட்டு வருகிறது
2.    2017 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
3.    நிமோனியா நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் செயற்கை சுவாச கருவியை டாக்டர்முகம்மது ஜோபெயர் சிஸ்டிகண்டுபிடித்துள்ளார்.
4.    இலங்கையில் நேற்று (அக்டோபர் 10) ஜனாதிபதியின் இணையமைப்பாளர் எம்.கே. ராகுலனால் மலையாளப் பள்ளி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
5.    டிராவிஸ் பாஸ்ட்ரானா(அமெரிக்க ஸ்டன்ட் வீரர்), லண்டன் தேம்ஸ் நதியின் இரண்டு தெப்பங்களுக்கு இடையே உள்ள “75 அடிஇடைவெளியை பைக்குடன் பாய்ந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளார்.
6.    இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
7.    அமெரிக்கா செல்லும் துருக்கியர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் இல்லாத விசா நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
8.    உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
9.    டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று மெட்ரோ இரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
10. பெங்களுர் சர்வதேச விமான நிலையம் அடுத்த ஆண்டு முதல் முழுவதுமாக ஆதார் எண்ணின் அடிப்படையில் இயங்கும் என பெங்களுர் சர்வதேச விமானநிலைய லிமிடெட் தெரிவித்துள்ளது.
11. பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை அக்டோபர் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் மத்தியக் கொள்கை குழுவின்(நிதி ஆயோக்) இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
13. 2030ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில், இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
14. ஆந்திர மாநிலம், கர்னூலில் பழங்கள் பதனிடும் தொழிற்சாலையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று(அக்டோபர் 09) தொடங்கி வைத்தார். இதில் உரையாற்றும் போதுவிதை உற்பத்தியில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுஎன்று கூறினார்
15. நாடக கலைஞர்கள் (திருப்பதி) இணைந்து 4 மணி நேரம் 20 நிமிடங்கள்அஹோ ஆந்திபோஜஎன்ற தலைப்பில் வரலாற்று நாட்டிய நாடகத்தை நடத்தி கின்னஸ் சாதனைப் படைத்தனர்.
16. முதல்வரின் மருத்தவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தினமும் 2000 ரூபாய் பெற்று கொள்ளலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17. காச நோய் இல்லாத சென்னைதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், ‘ரீச்தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்துயூ.எஸ்...டி. ஸ்டாப் டி.பி. பார்ட்னர்ஷிப்என்ற சர்வதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
விளையாட்டு செய்திகள்
18. ரொசாரியோவில் (ஆர்ஜென்டீனா) நடைபெற்ற உலகயூத்வில்வித்தைப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத்ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்
19. 1990ம் ஆண்டு உலக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற எகிப்து அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு ரஷியாவில் நடைபெறவுள்ள உலக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
20. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 2வது “20 ஓவர் கிரிக்கெட்போட்டி இன்று(அக்டோபர் 10) குவாஹாத்தில்(அஸ்ஸாம்) நடைபெறுகிறது.
21. யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
22. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
23. உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் (10 ஆட்டம்) வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனைப் படைத்துள்ளது.
24. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா சிக்சர் அடித்தார். தொடர்ந்து 5 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் 30 சிக்சர்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை பெற்றுள்ளார்.
வர்த்தக செய்திகள்
25. கரூர் வைஸ்யா வங்கியின் 750 ஆவது கிளை சென்னை சின்மா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
26. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
27. மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குஜராத் மாநில அரசு 4 சதவீதம் குறைத்துள்ளது.
28. பொதுத் துறையைச் சேர்ந்தஎனர்ஜி எஃபீஷியன்ஸி சர்வீசஸ் நிறுவனத்துக்கு” (இஇஎஸ்எல்) 10000 மின்சார கார்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
29. 2020ம் ஆண்டுக்குள் சந்தைப் பங்களிப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கசுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம்திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா தெரிவித்துள்ளார்.
30. மத்திய அரசின் துறைகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வந்தடி.ஜி.எஸ் அண்டு டி துறை” 100 ஆண்டுகள் பணி முடைவடைவதை ஒட்டி மூடப்படுகிறது.