TNPSC Current Affairs 20th October 2017

------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
20.09.2017
------------------------------------------------------
இந்திய நிகழ்வுகள்
1.    நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராகஜெசிந்தா ஆர்டர்ன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.    உலகில் மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகள் பட்டியலைதி லான்செட்என்ற பொது மருத்துவப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
3.    உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடுகள் பட்டியலைதாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன்என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது. இதில் டெல்லி(இந்திய தலைநகர்) 4வது இடத்தில் உள்ளது.
4.    இந்தியா உடனான நட்பை பலப்படுத்த அடுத்த 100 ஆண்டுகளுக்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது என்று அந்நாட்டுரெக்ஸ் டில்லர்சன்”(வெளியுறவு துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
5.    அக்டோபர் 19 அமெரிக்காவில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அமெரிக்க வர்த்தகம் ஒரே நாளில் முற்றிலுமாக சரிந்தது. இந்த தினம் கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம்(2017) 30வது கருப்பு தினம் ஆகும்
6.    கனடாவில் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா போன்ற பொருள்களுக்கு தடை விதிக்கப் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
7.    ரொறொன்ரோஒன்ராறியோமகாணத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உயர் குதிகால் காலணிகளை அணியக் கூடாது என்று அம்மாகாண லிபரல் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
தேசிய செய்திகள்
8.    இந்தியா மற்றும் ரஷியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் 10 நாள் கூட்டுப் பயிற்சி இன்று(அக்டோபர் 20) ரஷியாவில் தொடங்குகிறது.
9.    இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் வை-பை(Wi-Fi) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்(சைபர் தாக்குதல் ஏற்படும்) என்றுஇந்தியன் கம்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ்என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
10. அக்டோபர் 24ம் தேதி முதல் ஜெட் போர் விமானங்கள் லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
11. அசாமில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சினிமா படம் எடுத்தால் 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை சுற்றுலா துறை வழங்கவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
12. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது(தென் ஆப்பிரிக்காமுதல்).
13. ஆசிய கோப்பை போட்டியின்சூப்பர் 4 பிரிவில்இந்தியா, மலேசிய அணியை வீழ்த்தியது.
14. டென்மார்க் ஓபன் பாட்மின்டேன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
15. யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், கானா அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
16. வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
17. இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
18. இந்தியாவின்பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்குஎதிரான 2வது ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
வர்த்தக செய்திகள்
19. 4 நட்சத்திர குறியீடு மற்றும் 5 நட்சத்திர குறியீடு கொண்ட ஏற்றுமதி நிறுனங்கள் தங்கம் இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சகம் கட்டுபாடு விதித்துள்ளது.
20. ஜப்பானில் கார் உற்பத்தியை இரு வாரங்களுக்கு நிறுத்த நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
21. தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் உயர்ந்து ரூ. 432 கோடியாக உள்ளது.
22. சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் ஹோம் பைனான்ஸ்இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.40.31 கோடியாக உள்ளது.
23. ஊழியர்கள் சேமநல யுஏஎன் உடன் ஆதார்- ஆன்லைன் மூலமாக இணைக்க புதிய இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈபிஎப்ஓ இணையதளத்தின் ஆன்லைன் சர்வீசஸ் பிரிவின் கீழ் ‘eKYC Portal’ என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம்
24. சுமார் 600 நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 8,500 கோடி டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.


Post a Comment