Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 22nd December 2017

உலக செய்திகள்
 1. பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் பணத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது.
 2. இந்திய – சீன எல்லைச் சிக்கல் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியாவின் சார்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகளும், சீனா சார்பில் யாங் ஜியச்சி தலைமையிலான அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
 3. சீனாவில் உலகின் நீண்ட மின்பாதை அமைக்கும் பணியை முடக்கியுள்ளது.
 4. ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவை நிராகரித்தது ஐ.நா. சபை
 5. உலகை அச்சுறுத்தி வரும் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்த மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க வாகன நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
 6. முதல் உலகப் போரில் காணாமல் போன எஇ ஒன் கப்பல் 100 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு.
 7. பிரான்சில் 2040-ஆம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுத்தம்- புதிய சட்டத்துக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 8. டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை வாங்க அமெரிக்காவின் பார்சல் சர்வீஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய செய்திகள்
 1. உலக அளவில் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் உட்கொள்பவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 2. உத்தரகாண்டில் ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் மகிழ்ச்சியின் வங்கி என்ற பெயரில் துணிகள் உள்ளிட்டவை வழங்குவதற்காக மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
 3. உத்தரப்பிரதேசத்தில் ஆதரவற்ற பசுக்களுக்கான காப்பிடங்கள் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 4. குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 5. உத்தரப்பிரதேசம் தலைநகரான லக்னோவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கியுள்ளது.
 6. ராஜஸ்தான் மாநிலத்தில், ஹமேஷ் விஜய் (Hamesh Vijayee) என்ற பிரம்மாண்ட போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.
 7. பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. இந்திய கார் சந்தையில் முக்கியத்துவம் வகிக்கும் மாருதி சுசூகி நிறுவனம் வரும் 2020-ம் ஆண்டில் முதல் எலக்ட்ரிக் காரை விற்பனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 2. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 3. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுஷில்குமாரும், சாக்ஷி மாலிக்கும் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.
வங்கி செய்திகள்
 1. 2015-2016-ம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை5% ஆக அதிகரித்துள்ளது என வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே பெண்கள் பயன்படுத்துகின்றனர் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 2. மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனா ஆகியவற்றைவிட இந்தியா முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
 3. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி பயில்வது அதிகம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தங்கள்
 1. கருப்புப் பணம் குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
நியமனங்கள் மற்றும் பதவி விலக்குகள்
 1. கூகுளை நிர்வகிக்கும் Alphabet நிறுவனத்தின் செயல் தலைவர் எரிக் ஸ்மித் பதவியில் இருந்து விலகினார்.
 2. குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.No comments: