Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 23rd December 2017

உலக செய்திகள்
 1. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பழுப்பு நிற கடவுச் சீட்டுகளுக்கு(பாஸ்போர்ட்) மாற்றாக நீல நிற கடவு சீட்டுக்களை விநியோகிக்க அந்நாட்டு அரசு தெரிவித்தள்ளது
 2. ஜேர்மனி, அந்நாட்டில் மிக உயரமான மலையில்(zugspitze) மணிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்யும் மற்றும் 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் காரை தயாரித்துள்ளது
 3. ஐ.நா கவுன்சில், வடகொரியா மீது (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதால்) புதிய தடையை விதித்துள்ளது. இதன் படி 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
 4. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் செயல்படும் ஐக்கிய அமைதி காக்கும் படை அணியுடன் இலங்கை ராணுவப் படை அணி இணைந்து பணியாற்ற உள்ளது
 5. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பதில் ஐ.நா சபை அமெரிக்காவிற்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது. ஐ.நாவின் இத்தகைய தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்
தேசிய செய்திகள்
 1. அங்கன்வாடியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
 2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
 3. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
 4. உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
 5. இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான்கான், ஷாருகான் மற்றும் விராட் கோலி(இந்திய கிரிக்கெட் அணி) 1, 2, 3வது இடத்தில் உள்ளனர்.
வர்த்தக செய்திகள்
 1. 2016 – 2017 நிதி ஆண்டில் மோசடிகளின் மூலம் வங்கிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது
 2. பேஸ்புக், டிவிட்டர் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 3. இந்திய மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நுகர் பொருள் பிராண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது
 4. நலிவடைந்து வரும் பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
 5. பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா, பிப்ரவரி மாதத்திற்குள் 700 ஏடிஎம் மையங்களை மூட முடிவு செய்துள்ளது
 6. ஏர்டெல் நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 7. கூகுள் நிறுவனம், கரோம் புரோசர் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்க புதிய விளம்பர கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடும் டெஸ்ட் தொடருக்கு ‘தி ஃப்ரீடம் சீரிஸ்’ என்ற புதிய பெயரை சூட்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது
 2. 2017ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்
 3. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா தடகள வீரர்களுக்கான பிரிவில் ஸ்வரூப் மஹாவீர் உல்ஹான்கர் (மகாராஷ்டிரா) தங்கம் வென்றார்
 4. 35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - ரோகித் சர்மா
 5. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அடுத்த ஆண்டில் கிரிக்கெட் அகாதெமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
 6. மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி (காஞ்சிபுரம்) சாம்பியன் பட்டம் வென்றது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. மனித மண்டை ஓட்டின் வடிவத்தில் உள்ள ஒரு இராட்சத விண்கல் 2018ம் ஆண்டு பூமியை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
புதிய நியமனம்
 1. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக ஜி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்
ஒப்பந்தம்
 1. 300 ஆண்டுகள் பழைமையான நூல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவதற்காக புக்ஸ் பிரிட்டிஷ் நூலகம் மற்றும் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது
 2. இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைதியை பராமரிக்க இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் அளித்துள்ளது
 3. சுவிட்சர்லாந்தின் போர் விமானப் படையில் முதன் முறையாக பெண் விமானி(Fanny Chollet) நியமிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
 1. டிசம்பர் 23 - தேசிய விவசாயிகள் தினம்(கிசான் திவாஸ்)
 2. டிசம்பர் 23 – நரசிம்மராவ் (முன்னாள் பிரதமர்) நினைவு தினம்

No comments:

Post a Comment