Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 24th January 2018

உலக செய்திகள்
 1. ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் ஷேப் ஆப் வாட்டர் படம் 13 பரிந்துரைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
 2. கிரீஸ் நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
 3. சீனாவில் 9 மணி நேரத்தில் 1500 பணியாளர்கள் சேர்ந்து ஒரு ரயில் நிலையத்தையே கட்டி முடித்து, அதில் ரயிலையும் இயக்கிக் காட்டி உள்ளனர்.
 4. முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே 1, 2, 3 வது இடத்தில் உள்ளது
 5. உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம், பயங்கர வாதம், சுயநலப்போக்கு ஆகிய மூன்றும், தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாக உருவெடுத்துள்ளன என்றும் நாட்டில் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டு, சிவப்பு கம்பளம் விரிக்கப்படும் நடைமுறை உருவாகியுள்ளது எனவும் பேசினார்
தேசிய செய்திகள்
 1. தேசிய தகுதித் தேர்வு (நெட் தேர்வு) எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
 2. இந்தியா – மியான்மர் - தாய்லாந்துடையேயான நெடுஞ்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்று மத்திய நெடுங்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
 3. நாட்டில், 7 முக்கிய நகரங்களில் உள்ள 70 இடங்களில் ஒலி மாசு அதிகம் உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டது. இதில் ஜீடிமெத்லா(ஹைதராபாத்) முதலிடத்திலும், வடலா(மும்பை) 2வது இடத்திலும் உள்ளது
 4. ரசாயனத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அனுமதியில்லை என அறிவித்துள்ள சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் இதற்காக சிறப்பு திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளார்.
 5. விமான நிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் உடையில் வரும் மார்ச் மாதத்துக்குள் கேமரா பொருத்தப்படவுள்ளது. பயணிகளைக் கண்காணிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக செய்திகள்
 1. உலகில் தொழில்முனைவோர் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது
 2. இந்தியர்கள் ‘குட் மார்னிங்’ என்ற மெசேஜை மில்லியன் கணக்கில் அனுப்பி இன்டர் நெட் சேமிப்பை நிரப்பி விடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
 3. 10 சதவீத வளர்ச்சியை அடையும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் தொழிலாளர் சட்டம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருக்கிறார்.
வங்கி செய்திகள்
 1. 2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.
 2. ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வருமான வரி விலக்கினை 3 லட்ச ரூபாயாக உயர்த்தலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
விளையாட்டு செய்திகள்
 1. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சாவூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது
 2. உலகின் மிகவும் பணக்கார கிளப்பாக ‘மான்செஸ்டர் யுனைடெட்’ தேர்வு(2வது முறையாக) செய்யப்பட்டுள்ளது
 3. ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் சார்பில் ஓஎம்ஆர் மாரத்தான் போட்டி பிப்ரவரி 4ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் நடைபெற உள்ளது
 4. ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பின்னர் ‘லாயிட் போப்’ 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார்
நியமனங்கள்
 1. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜெரோம் பவல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.