Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 26th January 2018

உலக செய்திகள்
 1. தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் ஆகும்
 2. உலகில் தலை சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. கனடா மற்றும் ஜெர்மனி 2, 3வது இடத்தில் உள்ளது
 3. டோக்கியோவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி ‘டாரோ கோனோ’ கலந்து கொண்டார்
 4. துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் பாடல்களை பாடிய மாணவி சுதேசா(கேரளா) கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு துபாய் அரசு சார்பில் சுதேசாவுக்கு ‘ஹேக் ஹடம்தான் விருதுகள்’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
 5. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
 6. நாடு முழுவதும் 69-வது குடியரசு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
தேசிய செய்திகள்
 1. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் 'ஹிம்வீர்ஸ்' எனப்படும் இந்தோ - திபெத்திய எல்லைப் போலீசார் பனிச்சறுக்குப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
 2. ஆண்டுக்கு 18 இலட்சதிற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு முதல் முறையாக மற்றும் குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
 3. டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பீரங்கிகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 4. இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், தேடுதல் தளமான கூகுள் இந்தியாவின் பெருமைகளை சுட்டிக்காட்டி தனது டூடுளை வடிவமைத்துள்ளது.
 5. குடியரசு தினவிழாவில் ஆசியான் நாடுகள் கலந்து கொண்டதால், ஆசியான் - இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்திற்கான நடப்பாதை போடப்பட்டுள்ளது என்று பிரதமர் ‘மோடி’ தெரிவித்துள்ளார்
 6. இந்தியாவில் முதன் முறையாக இந்த ஆண்டு(2018) தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் ‘பத்ம ஸ்ரீ விருதுக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவில் முதல் முறையாக கொல்கத்தாவில் மிதக்கும் மார்க்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் குரேஷிய வீரர் மரின் சிலிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்
 2. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் கெர்பர் தோல்வி அடைந்துள்ளார்.
 3. நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) 10-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. உலகத் தலைவர்களின் பொறுப்புணர்வின்மையால் அணுஆயுதப் போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 2. பூமியின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய புதிய செயற்கைக் கோள் ஒன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியுள்ளது.

No comments:

Post a Comment