TNPSC Tamil Current Affairs for 02nd January 2018

உலக செய்திகள்
1.      சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக வாட் வரி விதிக்க முடிவு(அந்நாட்டு அரசுகள்) செய்துள்ளது
2.      பிரான்ஸில், 2020ம் ஆண்டில் வீட்டுவரி முழுவதுமாக அகற்றப்படும் என்று இம்மானுவேல் மேக்ரான்(அந்நாட்டு ஜனாதிபதி) அறிவித்துள்ளார்
3.      பாலஸ்தீனம், அமெரிக்காவிற்கான தங்கள் நாட்டு தூதரை ({சாம் சோம்லத்) நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
4.      இஸ்ரேலில் 2, 700 ஆண்டுகள் பழையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
5.      சீனாவில், தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் யானை தந்தங்களை வாங்கவும், விற்கவும் தடை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
தேசிய செய்திகள்
6.      புதிய வெளியுறவுத்துறை செயலாளராகவிஜய் கேசவ கோகலேநியமிக்கப்பட்டுள்ளார்
7.      அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பயனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
8.      இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் 27வது முறையாக பரிமாறிக்கொண்டது
9.      ஐஐஎம்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா (டிப்ளமோவுக்கு பதிலாக டிகிரி சான்றிதழ்) நிறைவேற்றப்பட்டுள்ளது
10. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
11. ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு 2018ம் வருடத்தை தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான வருடமாக அறிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
12. பாரத் ஸ்டேட் வங்கியின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 30 புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65 சதவீதமாக உள்ளது
13. முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2017ம் ஆண்டிற்கானதங்க மயில்விருது வழங்கப்பட்டுள்ளது
14. பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்ரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனம் அரபிக்கடல் பகுதியில், எண்ணெய், எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது
15. டெபிட் கார்டு மற்றும், பீம் செயலி மூலம் ரூ.2000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற புதிய சலுகையை மத்திய நிதியமைச்சகம் அமல்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்தகள்
16. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் முறையாக விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது
17. மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சென்னையின் சத்ய பாமா பல்கலைக்கழக அணி முதலிடம் பிடித்துள்ளது
18. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மானு பேகர்(அரியாணா), மெஹ{லி கோஷ்(மேற்கு வங்கம்) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
19. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பில் சிமன்ஸ்(மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்) நியமிக்கப்பட்டுள்ளார்
20. .டி.பி டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயரில் நேற்று புனேயில் தொடங்கியது

21. பிரிட்டிஸ் ஜுனியர் ஓபன் ஸ்குவாஷ், பிர்மிங்ஹாமில்(இங்கிலாந்து) ஜனவரி 3ம் தேதி நடைபெறுகிறது
Post a Comment