Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 27th February 2018

உலக செய்திகள்
  1. விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பு காரணமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2040ம் ஆண்டுக்கு முன்பாக செயலாக்கம் பெறும் என இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளிவீரர் Tim Peake தெரிவித்துள்ளார்.
  2. சிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதலால் உருகுலைந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட பச்சிளங்குழந்தைகளும், சிறுவர்களும் மீட்கப்படும் காட்சிகள் காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது.
  3. சவுதியில் முதல் முறையாக ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  4. தீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்காததால், அந்த நாட்டை கறுப்புப் பட்டியலில் மீண்டும் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) முடிவெடுத்துள்ளது.
இந்திய செய்திகள்
  1. மின்சாரம் பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  2. அரசு துறையால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஓய்வு பெற்ற ஊழியர்கள், பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  3. ரயில்களில் காத்திருப்போர் இடங்களை நிரப்பும்போது மகளிருக்கு முன்னுரிமை
  4. ஆதார் மூலம் நாடு முழுவதும் 3கோடி போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சோட்டுராம் சவுத்ரி தெரித்துள்ளார்.
  5. ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கான விமானப் பயணக் கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
  2. கரூர் மாவட்டம் புகளூரில் நடைபெற்ற டிஎன்பிஎல் ஐவர் பூப்பந்துப் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது
வர்த்தாக செய்திகள்
  1. பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
  2. இந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. முப்படைகளின் பயன்பாட்டுக்காக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ரஸ்டம் - 2’ ஆளில்லா உளவு விமானம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது


Post a Comment