Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 2nd February 2018

உலக செய்திகள்
 1. ஐக்கிய அரபு அமீரகத்தில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, உலகிலேயே மிக நீண்ட சாகச கம்பிப்பாதை என்ற வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
 2. ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான கோல்டன் பிளஸ் விருது அந்நாட்டின் மன்னார் ஆறாம் பிலிப் மகள் லியோக்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
 1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் 83கோடியே 84லட்ச ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகவும், வெளிநாட்டு நாணயங்கள் 45 டன் இருப்பு உள்ளதாகவும் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
 2. மும்பை மாநகர் முழுவதும் தெரு விளக்குகளை எல்ஈடியாக மாற்றுவதற்கு மாநகராட்சி பட்ஜெட்டில் 28கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 3. பிரதமர் மோடியின் 'தேர்வு வீரர்கள்' எனப் பொருள் படும் எக்சாம் வாரியர்ஸ் ((Exam Warriors)) என்ற புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
 4. தமிழகத்தில் முதல்முறையாக உணவுத்தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகத்துடன் கூடிய வாகனத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
வர்த்தக செய்திகள்
 1. கூகுளின் தலைமை நிறுவனமான அல்ஃபபெட் வரிஒதுக்கீடுகள் வகையில் 300 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளது.
 2. கேரள பட்ஜெட்டில் கடலோரப் பகுதிகளுக்கு ரூ.2000கோடி ஒதுக்கீடு
 3. சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஆன்லைன் மூலம் பலசரக்கு வியாபாரத்தில் அலிபாபா நிறுவனம் இறங்குகிறது.
 4. ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
 2. இந்திய ஓபன் குத்துசண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த மேரி கோம் மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
 3. இந்திய ஓபன் குத்துசண்டை போட்டியில் 68 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த தினேஷ் தாகர் வெள்ளி பாதகம் வென்றார்
 4. ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சம்பைன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹீனா நெலக்கல் வார்கே மும்முறை தாண்டுதலில் வெள்ளி வென்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கேனவேரல் (Cape Canaveral ) விமானப்படை தளத்தில் இருந்து பால்கான் 9 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
 2. காதின் வெளிப்புற பகுதி வளர்ச்சி அடையாதவர்களுக்கு அவர்களின் குருத்தெலும்பு செல்லில் இருந்து புதிய காதுகளை உருவாக்கி உயிரியல் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளார்
நியமனங்கள்
 1. தேசிய பாதிக்கபு படை இயக்குனராக ஜெனரல் சுதீப் லக்தாகியா பொறுப்பேற்றார்
 2. தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனராக எட்வீன்ஜோ நியமிக்கப்பட்டார்
ஒப்பந்தங்கள்
 1. பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேயின் சீனப் பயணத்தின்போது பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு உடன்படிக்கைகள் கையொப்பமாகியுள்ளன.No comments:

Post a Comment