Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 12th March 2018

உலக செய்திகள்
  1. ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
  2. மக்களிடமிருந்து வருமான வரி வசூலிக்காத நாடுகளின் பட்டியலில் ஓமான் முதலிடத்தில் உள்ளது
  3. இங்கிலாந்தை சேர்ந்த வார்க்கோ அறக்கட்டளை உலக பெற்றோர்கள் என்ற தலைப்பின் கீழ் குழந்தைகளின் கல்விக்காக அதிக ஆர்வம் காட்டும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
  1. இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் மிகச் சிறந்த சந்தையாக விளங்கும் எனத் தொலைத்தொடர்புக் கருவிகளைத் தயாரிக்கும் எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  2. மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எஞ்சின்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆல்ஸ்டாம் நிறுவனத் தலைவர் ஹென்றி பப்பார்ட் லாபார்ஜ் தெரிவித்துள்ளார்.
  3. இந்திய உணவுக் கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனத்தை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  4. தமிழ்நாட்டில் பரவிய காட்டுத்தீயை கருத்தில் கொண்டு வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய கேரள அரசு அதிரடியாகத் தடைவிதித்துள்ளது.
  5. உலக நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சோலார் புரட்சி ஏற்பட வேண்டும் என சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. ஜவுளி தொழில்நுட்பம் குறித்து சர்வதேச கருத்தரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் ஜவுளி மேலாண்மை கல்லுரியில் நடைபெற்றது
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்கு போட்டியில் 19 வயது இளைஞரான கிரிஃப்பின் கொலபின்டோ உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.
  2. அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது
  3. பெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய கைப்பந்து போட்டி ஆந்திராவில் பிமாவரத்தில் தொடங்கியது
  4. இந்திய விளையாட்டு துறை நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும் ஒத்துழைக்கும் வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் தலைவராக பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
Post a Comment