உலக செய்திகள்
- ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நேரடியாக 'நான் ஸ்டாப்' விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- நார்வேவில் ஹால்டன் சிறைச்சாலை உலகிலேயே மனித நேயமிக்க சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது
- இந்திய அதிகாரிகள் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
- ஆஸ்திரிலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 17 மணி நேரம் இடைவிடாது பறந்து குவான்டஸ் விமானம் சாதனைப் படைத்துள்ளது
தேசிய செய்திகள்
- செல்பேசியில் இணையதளம் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் வேகத்தில் உலக அளவில் இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் செல்பேசியில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடர்ந்து புதிய இந்தியா மற்றும் ஆரோக்கிய இந்தியா திட்டத்தை தொடங்கியுள்ளார்
- ஆதார் எண் சரிபார்ப்புக்கு வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் முக அடையாளமும் ஓர் அங்கீகாரச் சான்றாக கொள்ளப்படும் என தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
வர்த்தக செய்திகள்.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் மார்ச் 28ஆம் தேதி பெங்களூரில் செயற்கை அறிவுத்திறன் "ஏஐ" கருத்தரங்கை நடத்தவுள்ளது.
- டெல்லி இரு சக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனம் மேற்கு ரயில்வேயுடன் முதன்முறையாக சரக்கு ரயில் மூலம் விற்ப னை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
- தெற்காசிய வர்த்தகத்தை உபர் நிறுவனம், கிராஃப் (Grap) நிறுவனத்திடம் விற்பனை செய்யவுள்ளது.
- தொலைக்காட்சிகளில் பயன்படும் LED மற்றும் LCD செல்களின் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய வீரர் அனிஷ் பான்வாலா உலக கோப்பை ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 25மீ ராபிட் பையர் பிஸ்டல் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.
- உலக கோப்பை ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் கவுரவ் ரானா 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
- பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் "இஸ்லாமபாத் யுனைட்டெட்" சாம்பியன் பட்டத்தை வென்றது.
முக்கிய தினங்கள்
- மார்ச் 26 உலக ஊதா தினம், சிப்கோ இயக்கத்தின் 45வது ஆண்டு தினம்
No comments:
Post a Comment