Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 4th March 2018

உலக செய்திகள்
  1. சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் ((Jennifer Lawrence, Jodie Foster)) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெறுகிறது.
  2. வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய செய்தியை அனைவருக்கும் டெலிட் செய்யும் வசதிக்கான கால அவகாசம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  3. ஹீரன் நிறுவனம் அதிக சொத்துமதிப்பு கொண்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்
  4. சீனாவில் நிங்போ, ஷோஜிங், ஹங்ஜோ நகரங்களை இணைக்கும் அதிநவீன நெடுங்சலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
  1. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை திங்கள் முதல் தொடங்கவுள்ளது.
  2. வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச விமான சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
  3. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
  4. புதியன படைக்கும் எண்ணத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் பள்ளிகளில் 2,400 அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் ((Atal Tinkering Lab)) அமைக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார் .
  5. 2013 ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியா, செஷல்ஸ் நாட்டில் இராணுவ தளத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது
  6. உலகின் மிகப்பெரிய விமானப்போக்குவரத்து துறையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது
வர்த்தக செய்திகள்
  1. டீசல் கார்களுக்குத் தடை விதிக்க மாநகராட்சிகளுக்கு அதிகாரம் உண்டு என ஜெர்மனியின் லீப்சிக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
  2. இந்தியாவின் மிகப்பெரிய வன்பொருள் அமைப்பான மேக்கர் வில்லேஜ் நிறுவனம் ஒருநாள் தேசிய மாநாட்டை கொச்சியில் நடத்த உள்ளது.
  3. சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.
வங்கி செய்திகள்
  1. அரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் மாதம் வரை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு செய்திகள்
  1. ஆஸ்திரிலியவை சேர்ந்த 99 வயதான ஜார்ஜ் கோரோனஸ் 50 மீட்டர் நீச்சல் போட்டியில்16 வினாடியில் கடந்து சாதனை படைத்துள்ளார்
  2. உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹஜார் ராஜீவி தங்க பதக்கமும், ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் கோஷ் மோஹிலி வெண்கல பதக்கமும் வென்றனர்
  3. உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய 1 தங்க பதக்கம் மற்றும் 2 வெண்கல பதகத்தையும் பெற்று முதலிடத்தில் உள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியது. GOES S என்ற அந்த செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் (cape canaveral) உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
  2. வியாழன் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய, ஜூனோ என்ற விண்கலத்தை நாசா 2011-ஆம் ஆண்டு அனுப்பியது.
  3. மாதவிடாய் நின்ற பெண்கள் நாள்தோறும் குறைந்தது 40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய செயலிழப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என செயின்ட் வின்சன்ட் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை மருத்துவர் சோம்வெய்ல் ரஸ்லா (somwail rasla)வின் ஆய்வு மூலம் அமெரிக்க தெரிவித்துள்ளது
நியமனங்கள்
  1. முஸ்லிம்கள் நாடான பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
  2. இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment