Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 9th March 2017

உலக செய்திகள்
 1. பிரபல துரித உணவு தயாரிப்பு நிறுவனமான McDonald’s தனது நிறுவனத்தின் லோகோவை பெண்கள் தினத்திற்காக மாற்றியமைத்தது. ஆங்கில எழுத்தான M - என்பதை ஒருநாள் மட்டும் தலைகீழாக W - என McDonald’s மாற்றியது.
 2. மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை அமெரிக்க அருங்காட்சியகம் திரும்பப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூகிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற உயரிய விருதினை வழங்கியது.
 3. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் - 1 தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 4. இந்திய கைதிகளை கைதிகள் பரிமாற்று ஒப்பந்தத்தின் மூலம் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவுசெய்துள்ளது
 5. உலகின் பல முன்னணி வங்கிகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனகளில் சுமார் 525 பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளதாக பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார குழு தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
 1. 2 லட்சம் இந்திய மென்பொறியாளர்களை, தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
 2. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதற்க்காக ஏர்டெல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 3. விமான போக்குவரத்து துறை உடான் திட்டத்தை சர்வதேச விமான சேவைகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 4. பத்திரிகையாளர்களின் நலத்திட்டங்களுக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
 5. சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ உலக சமய மாநாடு சொற்பொழிவை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க மேற்கு வங்க அரசு முடிவுசெய்துள்ளது
 6. மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜதானி ரயிலில் பெண்களுக்காக சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன.
 2. ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை ஆந்திர சட்டப்பேரவையில், அம்மாநில நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்ணடு தாக்கல் செய்துள்ளார்.
 3. பொதுத்துறை வங்கிகளின் முதலை அதிகரிப்பதற்காக 46ஆயிரத்து நூற்று ஒரு கோடி ரூபாய் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
 4. தமிழகத்தில் கனரக பொறியியல் துறை மேம்பாட்டிற்கு7 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது
 5. விளையாட்டு செய்திகள் 
  1. சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மௌட்கில் (Anjum Moudgil) வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் தொடர்கிறது.
  2. முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது
  3. ஆசிய வில்வித்தை கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மது வித்துவான் மற்றும் கௌரவ் ட்ராம்பாக் லாம்பே ஆகியோர் ஆண்கள் மற்றும் பெண்கள் விரைவில் வெண்கலப்பாதகம் வென்றார்
  4. ஆசிய வில்வித்தை கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் ப்ரோமில ஆகியோர் கலப்பு மற்றும் தனி நபர் பிரிவில் தங்கம் வென்றார்
  5. தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தை சேந்த அய்யாசாமி 400மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார்
  6. சர்வதேச T20 போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார்
  7. தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பி அணி சாம்பியன் பட்டம் வென்றது
  நியமனங்கள்
  1. இங்கிலாந்து நாட்டில் தொழில்துறை மாணவர்ளுக்கான திறன் மேம்பாட்டு துறையின் தூதரக சஞ்சீவ் குப்தா நியமிக்கப்பட்டர்

No comments: