Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 1st September 2018

உலக செய்திகள்
 1. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் நிலையான விவசாய வேளாண்மைக்கு நிதியளித்தல் உலகளாவிய (Financing Sustainable Agriculture; Global Challenges and Opportunities) சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு-வை ஐக்கிய நாடுகள் அழைத்துள்ளது.
 2. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய கடற்பயிற்சியான KAKADU – 2018-ன் 14வது பதிப்பு ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் ஆகஸ்ட் 29-முதல் செப்டம்பர் 18 வரை நடைபெற உள்ளது.
 3. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ் நாடுகள்) இணைந்து உருவாக்கிய NDB – New Development Bank) எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கிகக்கு சர்வதேச தரச்சான்று நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (S & P) நிறுவனம் இந்த வங்கிக்கு ஏஏ பிளஸ் (AA Plus) தரச் சான்றை வழங்கியுள்ளது.
 4. ஆசியாவன் நோபல் பரிசு என்றழைக்கப்படும் இராமன் மகசேசே என்னும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களான மும்பையைச் சேர்ந்த ‘பரத் வட்வானி’ மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் ‘சோனம் வாங்க்’ உட்பட 6 பேருக்கு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற விழாவில் இராமன் மகசேசே விருது’ ஆகஸ்ட் 31 அன்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
 1. ரயில்வே பணிமனைகளிலும், உற்பத்திப் பிரிவுகளிலும், டெப்போக்களிலும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்திய ரயில்வேயும், இந்திய எரிவாயு ஆணையமும் ரயில் பவனில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
 2. அரசு மின்னணு சந்தை (Government e Marketplace (GeM) ) குறித்த தேசிய இயக்கம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்படும்.
 3. நீதிபதி தருண் அகர்வால் மேகலாய உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி நீதிபதி வசிப்தருக்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 4. உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மற்றும் சாதனைகளுக்கான அடல் தரவரிசை((Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) ) என்றும் புதிய தரவரிசை முறையை மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ((All India Council of Technical Education (AICTE)) , புது டெல்லியில் தொடங்கியுள்ளது.
 5. வோடோபோன் – ஐடியா இணைப்பு நிறைவடைந்தது.இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமாக வோடோபோன் ஐடியா மாறியுள்ளது.
 6. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உத்திரப் பிரதேச மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது.
 7. குடியிருப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்டின் (EESL – Energy Efficiency Services Limited) திறனை அதிகரிக்கும் விதமாகவும் வணிக நிதிக்கான அணுகலை அதிகரிக்கவும், இந்தியா, உலக வங்கியிடம் 220 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 8. இந்தியா மற்றும் ஆசியன் (ASEAN) நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய 6வது பிராந்திய வரிவான பொருளாதார கூட்டு(RCEP – Regional Comprehensive Economic Partnership) என்னும் வர்த்தக மந்திரிகள் மாநாடு (6th RCEP Trade Minister Meeting) சிங்கப்பூரில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
 1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் முதல் காலாண்டில் 2 சதவீகிதமாக இருக்கிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனும், உஸ்பெகிஸ்தான் வீரருமான ஹசன்பாய் டஸ்மட்டோவை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
 2. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

No comments: