Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 14, 2019





உலக செய்திகள் 

1. உலகின் அதி வேக புல்லட் இரயிலான "ஆல்பா-எக்ஸ்" ஜப்பானில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.

2. 2019ஆம் ஆண்டிற்கான உலக வணிக அமைப்பின்(WTO) அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் புதுடெல்லியில் நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டு கசகஸ்தானில் நடைபெறவுள்ளது.

தேசிய செய்திகள் 

3. யுவ விக்யானி கார்யக்ரம்(Yuva Vigyani Karyakram) என்ற இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை ISRO செயல்படுத்தியுள்ளது.

4. டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் ஹிந்துஜா குழுமம் முதலிடத்திலும் ரூபன் சகோதரர்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

5. கேரளாவில் பூரம் என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

6. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கான கற்றலை மேம்படுத்துவதற்க்காக "கல்வி தொலைக்காட்சி" தொடங்கப்படவுள்ளது.

7. பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) மொபைல் ரேடியேஷன் கண்டறிதல் முறையை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் கதிர்விச்சு மற்றும் இரசாயன உயிரி பொருட்களை கண்டறிய முடியும்.

8. எரித்திரியா நாட்டிற்கான இந்திய தூதுவராக சுபாஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

9. IPL - 2019 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக பட்டம் வென்றுள்ளது. மேலும் IPL - 2019 12வது சீசன் ஆகும்

10. ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

11. ஸ்பானிஷ் பார்முலா 1 கார் பந்தைய போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் பின்லாந்து வீரர் வால்டேரி பொட்டாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

12. 2019  சர்வதேச தடகள கூட்டமைப்பு கழகத்தின் (International Association of Athletics Federations – IAAF) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தாரில் நடைபெறவுள்ளது.










1 comment: